கந்தோலி இராச்சியம்

பண்டைய இந்திய மய இராச்சியம் From Wikipedia, the free encyclopedia

கந்தோலி இராச்சியம்
Remove ads

கந்தோலி இராச்சியம் (ஆங்கிலம்: Kantoli; Kantoli Kingdom; மலாய்: Kantoli; இந்தோனேசிய மொழி: Kerajaan Kandali) என்பது கிபி 5-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, தெற்கு சுமாத்திராவில் ஜம்பிக்கும் பாலெம்பாங்கிற்கும் இடையில் அமைந்து இருந்ததாகக் கருதப்படும் ஒரு பண்டைய இந்திய மய இராச்சியமாகும்.[1][2]

விரைவான உண்மைகள் கந்தோலி இராச்சியம் Kantoli Kingdom Kerajaan Kandali Kan - To - Li, தலைநகரம் ...

இந்த அரசமைப்புக்கு சமசுகிருத மொழியில் குந்தாலா (Kuntala) என்று பெயர்.[3] சீன வரலாற்றுப் பதிவுகள், சன்போட்சி (Sanfotsi) எனும் அரசு முன்பு கந்தோலி (Kantoli) என அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன.[4]

மேலும் கந்தோலி இராச்சியத்தின் அமைவிடமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவே வரலாற்று ஆசிரியர்களுக்கு, கந்தோலியை சிறீ விஜய பேரரசின் முன்னோடியாகக் கருத வழிவகுத்தது.[5]

சீன வரலாற்றுப் பதிவுகள், சிறீ விஜய பேரரசை சன்போட்சி என்று குறிப்பிடுகின்றன.[1]

Remove ads

பொது

தென் சீனாவில் லியூ சோங் வம்சாவளி ஆட்சியின் போது, ​​கந்தோலி இராச்சியம் தன்னுடைய தூதர்கள் பலரைச் சீனாவிற்கு அனுப்பியது. இரு இராச்சியங்களுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை கந்தோலிக்கு பெரும் செல்வத்தை வழங்கின. அந்த வகையில் கந்தோலி இராச்சியம், சீனாவைப் பெரிதும் நம்பி இருந்தது.[1]

தென் சீனாவை சுயி அரச மரபினர் கைப்பற்றியதன் மூலம், புதிய ஆட்சியாளரின் சிக்கன நடவடிக்கையால் கந்தோலி இராச்சியத்தின் வணிகம் பெரிதளவு குறைந்தது.

கந்தோலி அரசர் வாரணரேந்திரா

454-ஆம் ஆண்டு; மற்றும் 464-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கந்தோலி இராச்சியத்தின் அரசர் செரி வாரணரேந்திரா (Sri Varanarendra), இந்து ருத்ரா (Hindu Rudra) எனும் அன்பளிப்பை சீனாவிற்கு தம் தூதர்கள் மூலமாக அனுப்பினார்.

பின்னர் அவருடைய மகன் விஜயவர்மன் (Vijayavarman) என்பவரும் 519-இல் அன்பளிப்புகளைச் செய்துள்ளார்.[6]:55

Remove ads

முடிவு

7-ஆம் நூற்றாண்டில் இந்த இராச்சியம் வரலாற்றில் இருந்து மறைந்து போனது. ஒருவேளை, சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் ஜம்பி சுல்தானகம் மற்றும் சிறீவிஜயம் (பலெம்பாங்) ஆகிய இரண்டு பேரரசுகள் தோன்றியதன் காரணமாக இருக்கலாம்.[7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads