கனகசூரிய சிங்கையாரியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.[1][2]
சப்புமால் குமாரயாவின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 17 வருடங்கள் நீடித்தது. 1467 இல் கோட்டே அரசன் இறக்கவே, அந் நாட்டு அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றான். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டு 1478 வரை 11 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads