கபிலேந்திர தேவன்

கலிங்கத்தின் பேரரசன் From Wikipedia, the free encyclopedia

கபிலேந்திர தேவன்
Remove ads

கபிலேந்திர தேவன் ( Kapilendra Deva) (ஆட்சி கி.பி. 1434–1467)[1] சூரியவம்ச கஜபதி பேரரசின் நிறுவனர் ஆவார். இந்த வம்சம் இந்தியாவின் கிழக்கு மற்றும் தற்போதைய ஒடியின் தென்கிழக்கு பகுதிகளை மையமாக கொண்டு ஆட்சி செய்தது.[2][3][4][5] கீழைக் கங்க வம்சத்தின் முந்தைய மற்றும் கடைசி ஆட்சியாளரான ஐதாம் பானு தேவனுக்கு எதிரானப் போருக்குப் பின்னர் இவர் அரியணை ஏறினார். இவர் கபிலேந்திர ரௌத்ரே அல்லது சிறீ சிறீ கபிலேந்திர தேவன் என்றும் குறிப்பிடப்படுகிறார்.[6] கபிலேந்திரன் மகாபாரதத்தின் சூரிய குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அதனல் இவருக்கு சிறீ சிரீ ...(108 முறை) கஜபதி கௌடேசுவர நவகோடி கர்னாட கலபர்கேசுவர (அதாவது வங்காளத்தின் இறைவன் ( கௌடா ), கர்நாடகா பகுதியின் அதிபதி அல்லது விஜயநகரம், கலபுராகி மற்றும் ஒன்பது கோடி குடிமக்களின் இறைவன்) என்ற பட்டம் வழங்கப்பட்டது

விரைவான உண்மைகள் கபிலேந்திர தேவன், முதல் கஜபதி பேரரசன் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

கபிலேந்திர தேவனின் குடும்பத்தின் தோற்றம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன. புரி ஜெகன்நாதர் கோயிலின் நாளேடான மதலபாஞ்சியில் இவர் கபில ரௌதா என்று அழைக்கப்பட்டதாகவும், சூரிய வம்ச வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறது. காசியா என்ற பிராமணருடன் சேர்ந்து கால்நடைகளை மேய்த்து வந்ததாகவும், பின்னர் கபிலேந்திரன் புரிக்குச் சென்று, அங்கு பூரி ஜெஅந்நாதர் கோயில் வளாகத்தின் விமலா தேவி கோயிலுக்கு அருகில் பிச்சை எடுத்ததாகவும் கூறுகிறது. பின்னர் ஒரு மன்னனுக்கு வந்த தெய்வீக கனவைத் தொடர்ந்து கடைசி கீழைக் கங்க மன்னன் ஐந்தாம் பானுதேவனால் ஆதரிக்கப்பட்டு அவனது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வங்காளத்தின் மீதான முஸ்லிம்களின் படையெடுப்பை எதிர்த்துப் போரிடும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. மதல பாஞ்சியின் மற்றொரு பதிப்பு கபிலேந்திர தேவனின் தோற்றம் குறித்து இதே கதையைக் கூருகிறது. ஆனால் இவரது பெயரை கங்க மன்னர் ஐந்தாம் பானுதேவனின் சேவையில் இருந்து அரண்மனைக்குள் தங்கியிருந்த கபில ராவுத் என்று மாற்றியது. எதிர்களின் படையெடுப்பால் பானுதேவனின் ராச்சியம் அச்சுறுத்தப்பட்டபோது, கபில ராவுத் தன்னை ஒரு துணிச்சலான வீரனாகக் காட்டிக் கொண்டார். பானுதேவனின் மரணத்திற்குப் பிறகு, கபிலேந்திர தேவன் என்ற பெயரைக் கொண்டு ஒடிசாவின் ஆட்சியாளரானார்.[7]

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads