கமலை ஞானப்பிரகாசர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கமலை ஞானப்பிரகாசர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ ஆசாரியார்.
கமலை என்பது திருவாரூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. (கமலமுனி சித்தர் முக்தி அடைந்த தலமாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது.) இவர் குருஞான சம்பந்தருக்குக் குரு.
குருஞான சம்பந்தர் தருமபுர மடத்தைத் தோற்றுவித்தவரும் மயிலாடுதுறையை அடுத்த திருப்பனந்தாள் மடத்தின் தலைவராக விளங்கியவருமாவார்.

பிறப்பு

  • ஊர் - திருவாரூர் செட்டித்தெரு
  • வேறு பெயர்கள் - திருவாரூர் ஞானப்பிரகாசர், செட்டித்தெரு ஞானப்பிரகாசர், தேசிகர், பட்டாரகர், பழுதை கட்டி ஞானப்பிகாச பண்டாரம் என்பன.
  • பரம்பரை - சீகாழி சிற்றம்பல நாடிகள் என்பவரின் பரம்பரையில் சில தலைமுறைகளுக்குப் பின்னர் வந்தவர் தருமை சிதம்பரநாத முனிவர். இவர் இயற்றியது 'ஞானப்பிரகாச மான்மியம்' என்னும் நூல். இந்த நூல் அச்சிடப்படவில்லை.
  • கமலை ஞானப்பிரகாசரின் குரு - சிவபுரம் தத்துவப் பிரகாச பண்டாரம்
Remove ads

நூல்கள்

கமலை ஞானப்பிரகாசர் எழுதிய நூல்கள்

  1. அண்ணாமலைக் கோவை
  2. அத்துவாக் கட்டளை
  3. அத்துவித சாரம்
  4. ஆயிரப் பிரபந்தம்
  5. சாதிநூல்
  6. சிவபூசை அகவல்
  7. சிவானந்த போத சாரம்
  8. சைவானுட்டான அகவல்
  9. ஞானப்பள்ளு
  10. தியாகராசர் கழிநெடில்
  11. திருவானைக்கா புராணம்
  12. நந்திவனப் புராணம்
  13. பிராசாத மாலை
  14. புட்ப விதி
  15. பூமாலை
  16. மழபாடிப் புராணம்
  • தியாகராச லீலை என்னும் நூலை இவர் வடமொழியில் பாடினார் என்று சொல்லப்படுகிறது. [1]

மாணாக்கர்

கமலை ஞானப்பிரகாசருக்கு மாணாக்கர் பலர் இருந்தனர். அவர்களில் நூல் பாடியவர்கள் மட்டும் இங்குத் தொகுத்துக் காட்டப்படுகின்றனர்.

மேலதிகத் தகவல்கள் எண், மாணாக்கர் ...

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, அட்டவணை, 2005

இவற்றையும் காண்க

மேற்கோள் குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads