கமாலியேல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மூப்பர் கமாலியேல் /ɡəˈmljəl/,[1] (எபிரேயம்: רבן גמליאל הזקן; கிரேக்கம்: Γαμαλιήλ ο Πρεσβύτερος) அல்லது இராபி முதலாம் கமாலியேல் என்பவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் யூத தலைமைச் சங்கத்தின் குறிக்கத்தக்க நபரும் ஆவார். இவரின் தந்தை சிமியோன் மற்றும் இவரின் தாத்தா ஹிலெல் ஆவர். இவர் சுமார் கி.பி 70இல் இரண்டாம் கோவிலின் அழிவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்தார் என்பர். இவருக்கு சிமியோன் என்னும் பெயரில் ஒரு மகனும்,[2] ஒரு மகளும் இருந்தனர்.[3] சில கிறித்தவ மரபுகளின் படி இவரின் இரண்டாம் மகன் அபிபோ பின்நாட்களின் கிறித்தவம் தழுவினார் என்பர்.

கிறித்தவ மரபுகளின் படி இவர் யூத திருச்சட்ட ஆசிரியரும், பரிசேயரும் ஆவார்.[4] திருத்தூதர் பணிகள் 5ஆம் அதிகாரத்தின்படி இவர் மக்களிடையே நன்மதிப்பு பெற்றவராக விளங்கினார். இவர் திருத்தூதர்கள் தலைமைச்சங்கத்தின் முன் விசாரிக்கப்பட்டபோது, அவர்களுக்காகப்பரிந்து பேசினார்.[5] மேலும் திருத்தூதர் பணிகள் 22ஆம் அதிகாரத்தின் படி இவர் திருத்தூதர் பவுலின் ஆசிரியர் ஆவார்.[6]

Remove ads

புனிதராக

Thumb
புனித ஸ்தேவானின் இறப்புக்கு கமாலியேல் மற்றும் நிக்கதேமு துக்கம் கொண்டாடல், காலம் சுமார். 1615

சில கிறித்தவ மரபுகள் இவர் பின்நாட்களின் கிறித்தவத்தை தழுவினார் எனவும் பேதுரு மற்றும் புனித யோவானால், தனது மகன்களோடும் நிக்கதேமோடும் திருமுழுக்கு பெற்றார் என்பர்.[7] மேலும் இவர் கிறித்தவர்களுக்கு உதவுவதற்காக இதனை மறைவாக வைத்திருந்தார் என்பர்.[8] சில அறிஞர்கள் இம்மரபுகளை வெறும் புணைவுகளாகக் கருதுகின்றனர்.[9]

கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் ஆகஸ்ட் 2 ஆகும். புனித மரபின் படி இவரின் மீபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பர். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் ஆகஸ்ட் 3 ஆகும்.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads