கம்லா பெர்சாத் பிசெசார்

டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கம்லா பெர்சாத் பிசெசார் (Kamla Persad-Bissessar, பிறப்பு: ஏப்ரல் 22, 1952[1]) திரினிடாட் டொபாகோ குடியரசின் ஏழாவதும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக 2010, மே 26 ஆம் நாள் பதவியேற்றார்.[2][3].

விரைவான உண்மைகள் கம்லா பெர்சாத்-பிசெசார்Kamla Persad-Bissessar, திரினிடாட் டொபாகோவின் பிரதமர் ...

பெர்சாத்-பிசெசார் ஐக்கிய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ஆவார். இது மக்கள் கூட்டமைப்பு என்ற ஐந்து-கட்சிக் கூட்டணியின் முக்கிய தலைமைக் கட்சியாகும். 2010 மே 24 இல் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் இக்கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

கம்லா பெர்சாத் நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும், பதில் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.[4]

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா, இலட்சுமி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். மருத்துவர் கிரெகரி பிசெசார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.

அரசியல் வாழ்க்கை

கம்லா 1995 ஆம் ஆண்டில் இருந்து சிப்பாரியா தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1995 இல் இருந்து நாட்டின் சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பின்னர் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2010, ஜனவரி 24 இல் இவர் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 25 இல் இவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.

பிரதமர்

2010, மே 24 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேர்தலில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி அப்போதைய பிரதமர் பாட்ரிக் மானிங் இன் ஆளும் கட்சியை தோற்கடித்ததை அடுத்து, கம்லா நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads