கயவாய்

ஆறானது கடலுடன் கலக்கும் பகுதி. நன்னீரும், உப்பு நீரும் கலக்கும் இடம் From Wikipedia, the free encyclopedia

கயவாய்
Remove ads

கயவாய் (ஒலிப்பு) அல்லது கழிமுகம்(த.வ) அகன்ற கழிமுகம் என்பது, பகுதி மூடியதும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும், கடலுடன் தொடர்புடையதுமான, கரையோரக் காயல் நீர்ப்பரப்பு ஆகும். கயவாய்கள் உயர்ந்த வீதமான உயிரியல் உற்பத்தித்திறன் கொண்டவையாக உள்ளன. கயவாய்கள் பொதுவாக ஆறுகளின் கழிமுகங்களாக உள்ளதுடன், நிலப்பகுதி நீரோட்டத்தினால் அல்லது கரைக்கு அப்பாலிருந்து வரும் படிவு, வண்டல் ஆகியவை இங்கே காணப்படுகின்றன. கயவாய்கள் உப்புநீரால் ஆனவை.

Thumb
கிளாமத் ஆற்றுக் கயவாய்
Thumb
எக்சே ஆற்றுக் கயவாய்
Thumb
நித் ஆற்றுக் கயவாய்

கயவாய்கள், மனிதச் செயற்பாடுகளினால் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன. இவை ஆற்றெதிர்ப் புறத்திலும் (upstream), கடலிலும் நிகழும் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவதுடன், மாசுகளும், படிவுகளும் கயவாய்களில் செறிகின்றன.[1][2][3]

Remove ads

கயவாய்ச் சுற்றோட்டம்

கயவாய்கள், கடல்சார் சூழல்கள். இவற்றின் கார / அமிலத் தன்மைகள், உப்புத் தன்மை, நீர் மட்டம் என்பன, இவற்றுடன் கலக்கும் ஆறுகளிலும், தொடர்புடைய கடலிலும் தங்கியுள்ளது.

  • கயவாய்ச் சுற்றோட்டம், கயவாய்களில் பொதுவாகக் காணப்படும் ஒன்றாகும். நன்னீர் அல்லது உப்புத்தன்மை குறைவான நீர் மேற்பரப்பில் ஓடி வெளியேற, அடர்த்தி கூடிய உவர் நீர், கயவாய்களின் அடிப்பகுதியை நோக்கிக் கீழ் முகமாகச் செல்கின்றது.
  • எதிர்க் கயவாய் ஓட்டம்: இங்கே ஓட்டம் எதிர் முகமாகக் காணப்படும். அடர்த்தி கூடிய நீர் அடிப் பகுதியிலிருந்து வெளியேற அடர்த்தி குறைந்த நீர் மேற்பரப்புக்கு அருகில் உள்நோக்கி வரும்.

இவ்விரு தொடர்களும், கடலியலில், கயவாய்களுக்கும் அப்பால், விரிவான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. ஏறத்தாழ-மூடிய கடல் படுகைகளில் காணும் நீரோட்டங்களை விளக்க இவை பயன்படுகின்றன.

Remove ads

கயவாய் வகைகள்

கயவாய்களை நீரோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம்.

  • உப்புநீர் இணைவுநிலை
  • உயர் அடுக்கமைவு
  • குறைந்த அடுக்கமைவு
  • நிலைக்குத்துக் கலப்பு
  • எதிர்மறைக் கயவாய்
  • இடையிட்ட கயவாய்

அமைப்பு அடிப்படையிலான வகைப்படுத்தல்.

  • Bar-built கயவாய்
  • புவியோட்டுக் கயவாய்
  • கடற்கரைச் சமவெளிக் கயவாய்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads