கயிலைக் கலம்பகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கயிலைக் கலம்பகம் [1] என்னும் நூல் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரால் பாடப்பட்டது. கயிலை என்பது ஸ்ரீவைகுண்டம் [2] என்னும் ஊரின் பகுதியாக விளங்கும் கயிலாசபுரம் என்னும் ஊர்ப்பகுதி. இங்குக் கற்கோயில் ஒன்று உள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் கயிலாயநாதர். இறைவி பெயர் திரிபுரசுந்தரி. இது குமரகுருபரர் பிறந்த ஊர். குமரகுருபரர் தம் இளமைக் காலத்தில் இதனைப் பாடினார். இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. எட்டுப் பாடல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்று அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் பாடல்களின் நடையைப் பார்க்கும்போது இது குமரகுருபரரால் பாடப்பட்டதாகத் தோன்றவில்லை என்பது மு. அருணாசலம் குறிப்பு.

Remove ads

அடிக்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads