கரந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரந்தன் என்கின்ற பெயர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணப் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு வழங்கி வரும் பெயர் ஆகும்.
அமைவிடம்
இக்கிராமம் உரும்பிராய் நகரசபையினுள் தனது ஒரு பகுதியையும் நீர்வேலி கிராமசபையினுள் மறுபகுதியையும் கொண்டிருக்கின்றது. ஊரெழுவிலிருந்து கிழக்குப்பக்கமாக ஒரு மைல் தொலைவிலும் உரும்பிராயின் கிழக்குப் பகுதியிலும் போயிட்டி அச்செழுவின் தெற்குப்பகுதியிலும் நீர்வேலியின் மேற்குப்பகுதியிலும் இது அமைந்துள்ளது.
பாதைகள்
ஊரெழுவில் இருந்து நீர்வேலி நோக்கிச் செல்லும் பிரதான பாதை இக்கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றது. உரும்பிராயின் கிழக்குப்பகுதியிலிருந்து வரும் இரண்டு பாதைகள் இந்தப் பிரதான பாதையைச் சந்திக்கின்றன. காட்டு வைரவர் கோவில் என்றழைக்கப்படும் ஆலயத்தின் முன்னால் வரும் ஒரு பாதை இப்பிரதான பாதையின் மேற்குக் கரையிலும் மற்றைய பாதை இக்கிரமத்தின் நடுவிலும் சந்திக்கின்றது. நடுவில் சந்திக்கும் இப்பாதை தொடர்ந்து வடக்குப்புறமாகச் சென்று புன்னாலைக்கட்டுவன் - அச்செழு பிரதான பாதையைச் சந்திக்கின்றது.இதற்குச் சற்றுக் கிழக்கே இருந்து ஆரம்பிக்கும் பாதையும் அச்செழு அம்மன் ஆலயத்தின் முன்புறமாகச் சென்று புன்னாலைக்கட்டுவன் - அச்செழு பிரதான பாதையைச் சந்திக்கின்றது. நல்லூரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் “இராச வீதி” எனப்படும் பாதையும் இக்கிராமத்தின் கிழக்கே அமைந்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Remove ads
சனத்தொகை
இங்கே சுமார் 500 குடும்பங்கள்வரை வாழ்கின்றனர். சுமார் 70 வீதமானோர் விவசாயம் செய்பவர்களாகவே இருக்கின்றார்கள் ஆனாலும் 95 வீதமானோர் கல்வியறிவு உடையவர்களாகவே விளங்குகின்றார்கள். இந்தக் கிராமத்திலிருந்து பல கல்விமான்களும் தியாகிகளும் உருவாகியுள்ளனர். ஆலயம்
இதன் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது சிவபூதநாதர் தேவஸ்தானம். (பூதவராயர் கோவில் என்று முன்னர் இதனை அழைப்பர்.) இதனைச் சுற்றியுள்ளவர்களைக் காக்கும் தெய்வமாகவே அவர் விளங்குகிறார். ஆண்டுதோறும் ஆலயத்தில் திருவிழாக்களும் ஏனைய விழாக்களும் நடைபெறுகின்றன. தினமும் மூன்றுகாலப் பூஜையோடு அன்னதானங்களும் சிறுவர்களுக்கான நாவன்மை அறிவுப்போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. புனருத்தாரணம் செய்யப்பட்ட திருத்தலமும் அலங்காரத்தேரும் அருகேயுள்ள வீதியும் இவ்வாலயத்தின் எழிலுக்கு மெருகூட்டுவன. கணீர் என்று அதிகாலையில் ஒலிக்க ஆரம்பிக்கும் மணியோசை தவறாது மூன்று வேளையும் பூஜைக்கு முன்னர் சங்கீதமாக அனைவரது காதுகளிலும் ஒலிக்கும்.
நூல்நிலையம்
1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “கரந்தன் கலைவாணி வாசகசாலை” இக்கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. திருவாளர் க.இராசையா அவர்களின் அன்பளிப்பான நிலத்தில் இவ்வாசகசாலை அமைந்து அனைவரதும் வாசிக்கும் பசியைத் தீர்க்கின்றது. இதற்கு மிக அருகிலே ஒரு இராணுவ முகாம் அமைந்துள்ள போதிலும் அனைவரும் இங்குவந்து பயனடையத் தவறுவதில்லை. இது இப்போது “கரந்தன் கலைவாணி சனசமூக நிலையம்” என அழைக்கப்படுகின்றது.
உசாத்துணைகள்
கரந்தன் இணையம் பரணிடப்பட்டது 2008-04-21 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads