கரிசலாங்கண்ணி

From Wikipedia, the free encyclopedia

கரிசலாங்கண்ணி
Remove ads

கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை (Eclipta prostrata) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இஃது ஓராண்டுத் தாவரமாகும்.

Thumb
கரிசலாங்கண்ணி
Remove ads

பெயர்கள்

இதற்குக் கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போலக் கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.[1]

காணப்படும் நாடுகள்

கரிசலாங்கண்ணி ஞான மூலிகை எனப் போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேச‌சுத்தி மூலிகை எனப் பாராட்டப் படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துகள்:

  • நீர்=85%
  • மாவுப்பொருள்=9.2%
  • புரதம்=4.4%
  • கொழுப்பு=0.8%
  • கால்சியம்=62 யூனிட்
  • இரும்புத் தாது=8.9 யூனிட்
  • பாஸ்பரஸ்=4.62%
  • இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
Remove ads

குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads