கரிச்சான் குஞ்சு

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (சூலை 10, 1919 - 1992) ஒரு தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கை வரலாறு

நாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார்.

கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைபெயர் “கரிச்சான்”). இவரின் துணைவியார் பெயர் சாரதா. இவருக்கு லக்ஷ்மி பேபி, பிரபா, விஜயா, சாந்தா என்கிற நான்கு மகள்கள் உண்டு.

Remove ads

படைப்புகள்

சிறுகதைத் தொகுதிகள்

  • எளிய வாழ்க்கை முதலிய கதைகள்- காதல் கல்பம் (1955)
  • வம்சரத்தினம் (1964)
  • குபேர தரிசனம் (1964)
  • தெய்வீகம் (1964)
  • அம்மா இட்ட கட்டளை (1975)
  • அன்றிரவே (1983)
  • கரிச்சான்குஞ்சு கதைகள் (1985)
  • தெளிவு (1989)
  • எது நிற்கும் (2016)

கரிச்சான்குஞ்சு கதைகள் - முழுத் - தொகுப்பு (2021)

புதினங்கள்

  • பசித்த மானுடம் (1978)

குறும்புதினம்

  • சுகவாசிகள் (1990)

நாடகம்

  • கழுகு (1989)
  • காலத்தின் குரல்

மொழிபெயர்ப்புகள்

  • பெண்ணின் பெருமை - சரத்சந்திரர்
  • இந்தியத் தத்துவ இயலில் அழிந்திருப்பனவும் நிலைத்திருப்பனவும் - தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயா”
  • தொனி விளக்கு - ஆனந்த வர்த்தனர்"
  • சூரியகாந்திப்பூவின் கனவ ஸையத் அப்துல் மலிக்"
  • க்ஷேமேந்திரர்
  • சங்கரர்

கட்டுரை நூல்கள்

  • பாரதியார் தேடியதும் கண்டதும் (1982)
  • கு.ப.ரா
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads