கரிமச் சேர்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அங்கக சேர்மம் (Organic compund) அல்லது பொதுவாக கரிமச் சேர்மம் (Carbon compound) என்பது, கரிமம் மற்றும் ஐதரசன் ஆகியவற்றை தனது மூலக்கூறில் கொண்டுள்ள வேதியியல் சேர்மங்களைக் குறிக்கும். ஆனால் விதிவிலக்காக கார்பைட்டுகள், காபனேற்றுகள், ஆலைடுகள் போன்றவையும், கரிமத்துடன் ஆக்சிசன் மற்றும் நைதரசன் சேர்ந்த வேதியியல் சேர்மங்களும் இதில் அடங்குவதில்லை.

கரிமத்தின் சேர்க்கைத் திறன் மற்றும் மற்ற கரிம அணுக்களுடன் சங்கிலிப் பிணைப்புகளை உருவாக்கும் திறன் காரணமாக பல இலட்சம் கரிம சேர்மங்கள் அறியப்பட்டுள்ளன. கரிம சேர்மங்களின் பண்புகள், எதிர்வினைகள் மற்றும் தொகுப்புகள் பற்றிய ஆய்வு கரிம வேதியியல் எனப்படுகிறது.[1][2] கரிம சேர்மங்கள் பூமியில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே இருந்தாலும், அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் அறியப்பட்ட அனைத்து உயிர்களும் கரிம சேர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை.
செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்ற பெரும்பாலான கரிம சேர்மங்கள் பாறை எண்ணெய் மற்றும் அதனிலிருந்து பெறப்படுகின்றன. அவை நிலத்தடியில் உள்ள கரிமப் பொருட்களிலிருந்து உயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலை காரணமாக உருவாகின்றன.[3] அறியப்பட்ட வேதியியல் சேர்வைகளுள் பாதிக்கும் மேற்பட்டவை கரிமவேதியியல் சேர்வைகள் ஆகும். இதனால், இவற்றை வகைப்படுத்துவதற்கு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சில கரிமவேதியியல் சேர்வைகளின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.[4]
|
|
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads