கரிம ஒளிகாலும் இருமுனையம்

From Wikipedia, the free encyclopedia

கரிம ஒளிகாலும் இருமுனையம்
Remove ads

கரிம ஒளிகாலும் இருமுனையம் (OLED, organic light-emitting diode) என்பது ஒரு ஒளிகாலும் இருமுனையம் (LED), இதன் உமிழும் மின்னொளிர்வுப் பட்டை ஒரு கரிமச் சேர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந்த மின்னொளிர்வுப் பட்டை இரு மின்முனைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த மின்முனைகளில் ஒன்று ஒளிபுகு தன்மை கொண்டதாக இருக்கும்.[1][2][3]

Thumb
55" எல்ஜி OLED தொலைக்காட்சித் திரை 2012 நுகர்வு இலத்திரனியல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
Thumb
OLED ஒளிச் சட்டம்

கரிம ஒளிகாலும் இருமுனையங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள், கணினித் திரைகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மத்துணைகள் போன்றவற்றில் எண்ணிமக் காட்சிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads