இயற்கை வேளாண்மை
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத உணவு விளைவிக்கும் முறை. From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயிர்ம வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.[1] இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது.
Remove ads
வரலாறு
கரிம விவசாய இயக்கம் 1930 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் துவங்கியது. 1940 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் செயற்கை உரங்கள் மீது விவசாயம் அதிக அளவில் சார்ந்திருந்தமைக்கு ஓர் எதிர்ப் போக்காக இது காணப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் அதன் பிறகு அம்மோனியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற மற்ற உரங்களும், ஹேபர்-பாஸ்ச் முறையைப் [2][3] பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் அதிக நாட்டம் காட்டினார்கள்.
சர் ஆல்பர்ட் ஹோவர்ட என்பவர்தாம் கரிம வேளாண்மையின் தந்தையாகக் கருதப்படுகிறார். [4] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜே.ஐ.ரொடேல் [5][6][7] , மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் லேடி ஈவ் பல்ஃபோர்ட்[8] ஆகியோரும் மற்றும் உலகெங்கும் மேலும் பலரும் இதற்காக மேற்கொண்டு பணிகளைச் செய்தனர்.
பொது மக்களிடையே சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர். சில சமயங்களில் அரசாங்கம் இதற்காக அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இந்த முறைமைக்கு மாறினர். வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் தரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர். வளரும் நாடுகளில் சில விவசாயிகள் பொருளாதாரக் காரணங்களுக்காக இதற்கு மாறியுள்ளனர்.[9] ஐரோப்பா போன்ற நாடுகளில் இது மிகவும் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்த்கதாகும்.
Remove ads
இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்
பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது. (கீழ்கண்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்பட வேண்டும்).
- நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும் (ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு)
- உயிர்ச்சூழல் மற்றும் சுழற்சிக்கேற்ப இயைந்து செயல்பட்டு சுற்றுச்சூழலின் வாழ்வியல் மேம்பட உதவ வேண்டும் (உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு)
- வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் உறவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் நடுநிலையாக செயல்பட வேண்டும் (நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு).
- நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு கவனமாகவும் பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் (பராமரிப்பு பற்றிய கோட்பாடு).
நில மேலாண்மை
மண் வளம்தான் வேளாண்மையின் அடிப்படை. பயிர் வளர்ச்சிக்கான சத்துக்களில் முதன்மையான தழைச்சத்தை, சரியான அளவு சரியான நேரத்தில் கிடைக்க செய்யவேண்டும்.[10]. பயறு வகை பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், ஊடு பயிர்கள் மற்றும் ஊடுபயிர் முறையில் பயிறு வகைகள் மற்றும் குடும்ப தாவரங்களை பயிரிடும்போது ரைசோபியம் என்ற நுண்ணுயிர் தழைச்சத்தை, வளிமண்டலத்திலிருந்து வேர் முடிச்சிகளில் பெற்றுக்கொள்கிறது. பூச்சிகள் மற்றும் தாவர நோய்களை கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் ஊடு பயிர்கள், பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ள தழைச்சத்ததை மண்ணில் அதிகரிக்கும். பயிர் எச்சங்கள் மீண்டும் மண்ணுக்குள் மேலும் கீழும் உழப்படுவதின் மூலமும் தழைச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யாலாம்[10] கரிம விவசாயிகள் மக்கிய கால்நடை கழிவு உரங்கள் (எருக்களையும்) பலவகைப்பட்ட புண்ணாக்கு, பதனப்படுத்தப்பட்ட சில விதைகளின் துகள்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மணிச்சத்திற்காக ராக் ஃபாஸ்ஃபேட், கிரீன்சேண்ட் போன்ற கனிம பொடிகள், பொட்டாஷியம் அளிக்கும் இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் பொட்டாஷ் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் மண்ணின் வளத்தை மேம்படுத்த கார, அமில நிலை திருத்தப்பட வேண்டியிருக்கும். இயற்கையான கார, அமில மண் திருத்தங்களில், சுண்ணாம்பு மற்றும் கந்தகம் ஆகியவை அடங்கும். ஆனால், இரும்பு சல்ஃபேட், அலுமினியம் சல்ஃபேட், மாக்னிஷியம் சல்ஃபேட் மற்றும் கரையக் கூடிய கரிம வேதியியல் சேர்மங்களான, செயற்கைக் கூட்டுப் பொருட்கள் உரங்களை இயற்கை வேளாண்மையில் அனுமதிக்கப்படுவதில்லை.
விவசாயம் சார்ந்த கால்நடை வளர்க்கும் பண்ணைகள் முயல் மசால், வேலிமசால் போன்ற தழச்சத்தை வெளியிடும் கால்நடை தீவன புற்கள்(கால்நடைத் தீவன) பயிர்களைப் பயிரிடப்படுவதாலும், மண்ணின் வளம் அதிகரிக்க உதவுகின்றன.[10]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads