கருவூர்க் கலிங்கத்தார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருவூர்க் கலிங்கத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் கலிங்கத்திலிருந்து கருவூர் வந்து வாழ்ந்தவர்.[1] அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 183 (பாலைத் திணை)

கலிங்கம் என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். எனவே இவர் துணி வாணிகம் செய்தவர் எனக் கொள்ளலாம். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

பாடல் தரும் செய்தி

தலைமகன் கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது. தலைவன் திரும்பவில்லை. வாக்குத் தவறமாட்டார் என்றாயே, அவர் வரவில்லையே என்று தலைவி தோழியைக் கேட்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

உவமை நலம்

யானைகள் கூட்டம் கூட்டமாக மேய்வது போல மழை மேகங்கள் வானத்தில் மேய்கின்றனவாம்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads