கர்நாடகா சமசுகிருத பல்கலைக்கழகம்
கர்நாடகாவில் உள்ள மாநில பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்நாடகா சமசுகிருத பல்கலைக்கழகம் (Karnataka Sanskrit University) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சமசுகிருத மொழியின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காகத் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
Remove ads
வரலாறு
இப்பல்கலைக்கழகம் 2010ஆம் ஆண்டு கர்நாடக அரசால் நிறுவப்பட்டது. கர்நாடக சமசுகிருத பல்கலைக்கழகம் சமசுகிருத மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். சமசுகிருதம் அறிவார்ந்த, அறிவியல், இலக்கிய, கலாச்சார பாரம்பரியம் கொண்ட மொழியாகும்.[சான்று தேவை]
கர்நாடகாவில் சமசுகிருதத்தினை கற்பிக்கும் 31 கல்லூரிகள் உள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் 243 வேதம் மற்றும் சமசுகிருத பாடசாலைகள் உள்ளன. சமசுகிருத பாடசாலைகளை நிர்வகிப்பதற்காகக் கர்நாடக அரசால் சமசுகிருத கல்வி இயக்குநரகம் நிறுவப்பட்டுள்ளது.[சான்று தேவை]
Remove ads
பல்கலைக்கழக அமைப்பு
கர்நாடக சமசுகிருத பல்கலைக்கழகம் முக்கியமாக நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை:
- கற்பித்தல் பிரிவு
- ஆராய்ச்சி பிரிவு
- வெளியீட்டுப் பிரிவு
- நிர்வாக பிரிவு
இராமநகர் மாவட்டம், மாகடி வட்டம், குதுரு ஹோப்ளியில் இப்பல்கலைக் கழகத்திற்கு நூறு ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தற்போது 2 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 10 உதவி பெறும் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் 9 உதவி பெறாத இணைப்புக் கல்லூரிகளை இதன் வரம்பில் உள்ளடக்கியுள்ளது. இது கர்நாடகாவில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியைக் கவனித்துக்கொள்வதற்காக சமசுகிருத கல்வி இயக்குநரகத்தை நிறுவியுள்ளது. இந்த இயக்குநரகம் மாநிலம் முழுவதும் 354 அங்கீகரிக்கப்பட்ட சமசுகிருத பாடசாலை கண்காணிக்கும் பணியினை உள்ளடக்கியது.[2]
Remove ads
மேற்கோள்கள்
அதிகாரப்பூர்வ தளம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads