கர்நாடகா விரைவுவண்டி
இந்தியாவில் உள்ள ஒரு விரைவுத் தொடருந்து From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்நாடகா விரைவு ரயில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூர் நகரத்திற்கும் இந்தியாவின் தலைநகரான புது டெல்லிக்கும் இடையே, தினசரி செயல்படும் ஒரு அதிவிரைவு ரயில்சேவையாகும். புது டெல்லியினை தென்னிந்தியாவின் இணைக்கும் ரயில்களில் முக்கியமான ரயில் இதுவாகும். அத்துடன் கால நேரத்தினை சரியாக பின்பற்றுவது மற்றும் வழக்கமான ரயில் வகையிலும் இந்த ரயில் மிகவும் பிரபலமானது.[1]
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
வரலாறு
ஆரம்பத்தில் வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில்சேவை, பின்னர் வாரத்திற்கு மூன்று முறை என்று மாற்றப்பட்டது. கர்நாடகா விரைவு ரயில் மற்றும் கேரளா விரைவு ரயில் இரண்டும் ஜோலார்பேட்டை வரை ஒன்றாகச் செயல்பட்டது. அப்போது மிகவும் பிரபலமாக KK என அழைக்கப்பட்டது. இது போபால், நாக்பூர், விஜயவாடா மற்றும் ஜோலார்பேட்டை வழியாகச் செயல்பட்டது. வாரத்தின் எஞ்சிய இரு நாட்களில் இது ஆந்திர பிரதேச விரைவு ரயிலுடன் இணைந்து செயல்பட்டது. 1987 ஆம் ஆண்டு கேரளா விரைவு ரயிலில் இருந்து, கர்நாடகா விரைவுரயில் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு கர்நாடகா விரைவு ரயில் குண்டாக்கல், செகந்திராபாத் வழியாக செயல்படத் தொடங்கியது. அதன் பின்னர் வாடி, டௌன்ட், மான்மட், புசவால், இட்டரிசி மற்றும் போபால் வழியாக வழிமாற்றப்பட்டது. இதுதான் இதன் தற்போதைய வழித்தடமாகும்.
Remove ads
வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்
Remove ads
வண்டி எண்
இது 12627[3] மற்றும் 12628[4] என்ற வண்டி எண்களுடன் செயல்படுகிறது. இரு ரயில் சேவைகளிலும் உணவகம் மற்றும் பொதுவான சமையல் வசதி உள்ளது. சுமார் 2410 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 61 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும் இந்த ரயில் 33 ரயில் நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது.
விபத்துக்கள்
1991 ஆம் ஆண்டு, பெங்களூரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மகலிடுர்கா எனும் பகுதியில் கர்நாடகா விரைவுரயில் விபத்துக்குள்ளது. இது மழைபொழியும் மாலைப்பொழுதில் நடைபெற்றது. இந்த விபத்தினால் 30 பேர் உயிரிழந்தனர்.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads