கர்நாடக சலனச்சித்ர அகாடமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்நாடக சலனச்சித்ர அகாடமி (பொருள்: கர்நாடக திரைப்படக் கழகம்) என்பது கர்நாடக அரசு ஏற்படுத்திய அமைப்பு ஆகும். கன்னடத் திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழா உள்ளிட்ட திரைப்பட நிகழ்வுகளை நடத்தி வைக்கிறது. தாரா என்னும் நடிகை, இதன் தலைமைப் பதவியில் உள்ளார்.[1]
செயல்பாடுகள்
கர்நாடகத்தில் மாவட்ட, வட்ட அளவிலான திரைத்துறைக் கல்விக் கழகங்களை நிறுவுவதும், திரைத்துறை தொடர்பான பாடங்களை கற்பிப்பதும் இதன் நோக்கம் ஆகும். திரைப்பட சங்கங்களை அமைப்பதற்கும், திரைத்துறை தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது. பெங்களூரில் நடந்த ஆறாவது பெங்களூர் பன்னாட்டுத் திரைப்பட விழாவை முன்னின்று நடத்துமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டது.[2] இந்தியாவின் பிற திரைப்பட சங்கங்களுடன் இணைந்து, கர்நாடக சலனச்சித்ர அகாடமியின் பன்னாட்டுத் திரைப்பட விழாவையும் நடத்தும்.
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads