கர்பகோசதாது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வஜ்ரயான பௌத்தத்தில், கர்பகோசதாது (சமஸ்கிருதம்: गर्भकोस-धातु; ஜப்பானியம்: 胎蔵界 டைஸோகை) அல்லது கர்ப மண்டலம் என்பது ஐந்து வித்யாராஜாக்கள் வசிக்கும் மண்டலம் ஆகும்.

கர்மகோசதாதுவை குறித்த விவரங்கள் மகாவைரோசன சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த மண்டலத்தின் பெயர் மகாவைரோசன சூத்திரத்தின் இரண்டாம் அதிகாரத்தில் இருந்து பெறப்படுகிறது. அதில் மஹாவைரோசனர் இந்த மண்டலத்தின் ரகசிய போதனைகளை வஜ்ரசத்துவருக்கு தன்னுடைய காருண்ய கர்பத்தில் இருந்து உபதேசித்ததாக கூறப்பட்டுள்ளது. .[1]
அனைத்து மண்டலங்களுள் கர்பகோசதாதுவும், வஜ்ரதாதுவும் மிகவும் புகழ்பெற்றவை. இவ்விரு மண்டலங்களும் இணைந்து இரு பிரிவு மண்டலம் என்ற ஒன்றை உருவாக்குகின்றன. கர்பகோசதாதுவும் வஜ்ரதாதுவும் இணைந்து ஷிங்கோன் பௌத்த சடங்கான அபிஷேகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. பாரம்பரிய ஷிங்கோன் பௌத்த அறைகளும், இந்த கர்ப மண்டலத்தின் படம் கிழக்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது மஹாவைரோசன புத்தரின் போதியின் இளைய நிலையை குறிப்பதாக கருதப்படுகிறது. [2] அதே நேரத்தில் வஜ்ரதாதுவின் படம் மேற்கு சுவரின் மாட்டப்படுகிறது. இது வைரோசனரின் இறுதி நிலையை குறிப்பதாகும்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads