கர்ரெட் மார்கன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கர்ரெட் மார்கன் (மார்ச் 4, 1877 – ஜூலை 27, 1963, ஆங்கிலம்: Garrett Augustus Morgan) என்பவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர். பள்ளிப் படிப்பையே முறையாகத் தொடராத இவர், தன் உழைப்பாலும், திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து சாதனைகளைப் புரிந்தார். கிரீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் இவர்தான்.[1] 100 கிரேட்டஸ்ட் ஆப்ரிகன் அமெரிக்கன்ஸ் என்ற நூலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.[2]
Remove ads
பிறப்பும், வாழ்க்கையும்
இவர் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் 1877இல் பிறந்தார். இவரின் தந்தை ஆப்பிரிக்க வமிசாவளியைச் சேர்ந்தவர். கொத்தடிமையாக இருந்தவர்.[3] பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப்போலவே மார்கனும் கல்வியை இடையில் கைவிட்டவரே. 14 வயதில் ஒகையோ மாநிலத்தின் சின்சினாட்டிக்குச் சென்றார். கூலிவேலை செய்தார். அந்த வருவாயில் ஒரு ஆசிரியரிடம் தனிப்பயிற்சியில் கல்விகற்றார். கிளீவ்லேண்ட் நகரில் 1895இல் துணி உற்பத்தியாளரிடம் தையல் இயந்திரங்களைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். இயந்திரங்களைப் பிரித்து, பொருத்தி மேம்படுத்தினார். இதனால் இயந்திரங்களின் வடிவமைப்பு, அவை இயங்கும் முறை போன்றவற்றை நன்கு கற்றுத்தேர்ந்தார்.
Remove ads
சொந்தத் தொழில்
தையல் இயந்திரத்தின் வாரைக் கட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.[4] இதன்பிறகு இவர் பிரபலமானார். 1907இல் தையல் இயந்திரம் மற்றும் காலணி பழுதுபார்க்கும் கடையைத் தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். 1909இல் தன் மனைவியுடன் சேர்ந்து கட் ரேட் லேடிஸ் கிளாத்திங் ஸ்டோர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[5]
கண்டுபிடிப்புகள்
- 1914இல் புகை,நச்சுவாயுக்களிடமிருந்து காக்கின்ற பாதுகாப்புக் கவசத்தைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார்.
- சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம்,சீப்பு,கூந்தல்சாயம் போன்ற அழகுசாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார்.
- எளிய திறன்மிக்க போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கருவியைக் கண்டுபிடித்து இதற்கு காப்புரிமைபெற்றார்.[6]
சமூகப் பணிகள்
ஆப்பிரக்க அமெரிக்க மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908இல் கிளீவ்லேண்ட் இசோசியேசன் பார் கலர்டு மென் என்ற அமைப்பைத் தொடங்கச் செய்தார்.[3][7] கருப்பின மக்களுக்கு பத்திரிக்கை,மன்றம்,பள்ளி, கல்லூரிகள் துவங்க பெரு முயற்சிகள் மேற்கொண்டார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads