கலஜ் மக்கள்

From Wikipedia, the free encyclopedia

கலஜ் மக்கள்
Remove ads

கலஜ் (Khalaj) என்பவர்கள் பெரும்பாலும் ஈரானில் வாழும் ஒரு துருக்கிய இனக்குழு ஆவர்.[3] இவர்களில் பெரும்பாலானவர்கள் பாரசீகமயமாக்கப்பட்ட போதிலும், ஈரானில் இவர்கள் இன்றும் தொடர்ந்து கலஜ் மொழியை பேசி வருகின்றனர்.[4]

Thumb
"கலஜ்ஜின் இல்தபர் (துணை மன்னர்)" என்று குறிப்பிடப்பட்டுள்ள தெகின் ஷாவின் நாணயம், ஆண்டு பொ. ஊ. 728. ஹெப்தலைட்டு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சாசானிய மன்னர் முதலாம் பெரோசின் (438-457) வடிவமைப்பை பின்பற்றியுள்ளது. முன்புறம்: திரிசூலங்கள் மற்றும் சிங்க தலையை கொண்ட மகுடம். இதை சுற்றி பிராமி எழுத்துக்கள் உள்ளன(11:00இல் தொடங்குகிறது): ஸ்ரீ ஹிதிவிர கரலவ பரமே - சிவர ஸ்ரீ சஹி திகினதேவ கரிதா ("கலஜ்ஜின் மதிப்பிற்குரியஇல்தபர், உச்சபட்ச கடவுளின் வழிபாட்டாளர், மதிப்பிற்குரிய மன்னர், தெய்வீக பிரபு தெகின் இந்த நாணயத்தைஅச்சிட்டுள்ளார்"). உட்புறம் பாக்தீரிய எழுத்துக்கள்: σρι Ϸανο ஸ்ரீ சஹோ ("மதிப்பிற்குரிய மன்னர்").[1] பின்புறம்: ஈரானிய நெருப்புக் கடவுள் அதூரின் உருவம். பகலாவி மொழி எழுத்துக்கள் (12:00இல் தொடங்குகிறது): குராசானின் மன்னர் தெகின், ஆண்டு 77. மூன்றாம் எசுதகெர்தின் சகாப்தத்திற்கு பிந்தைய ஆண்டு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் பொ. ஊ. 728 என்பதாகும்.[1][2]
Remove ads

பூர்வீகம்

Thumb
ஹெப்தலைட்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்ட பொ. ஊ. 8ஆம் நூற்றாண்டின் ஒரு கலஜ் நாணயம். இது சாசானிய மன்னர் முதலாம் பெரோசின் (438-457) நாணயத்தை பின்பற்றியுள்ளது முதலாம் பெரோசின் மகுடம் சூட்டப்பட்ட மார்பளவு உருவமானது முன்புறத்தில் காட்டப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறம்: திரிசூலம் உடைய நிற்கும் சிவபெருமானின் உருவம். இடது புறம் பாக்தீரிய மொழியில் "கலஜ்" (χαλαγγ அல்லது χαλασσ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[5]

அல் குவாரிஸ்மியை தொடர்ந்து ஜோசப் மர்க்வர்த் என்பவர் கலஜ் மக்கள் ஹெப்தலைட்டு கூட்டமைப்பின் எஞ்சியவர்கள் என்று குறிப்பிடுகிறார்.[6] "தற்போது இவர்கள்"[7] துருக்கிய கவோசு பூர்வீகத்தை[8] உடையவர்கள் என்று கருதப்பட்டாலும், ஹெப்தலைட்டு என்பவர்கள் இந்தோ-ஈரானியர்களாக[6] இருந்திருக்க வாய்ப்பு இருந்துள்ளது. கலஜ் உண்மையிலேயே துருக்கிய மொழி பேசிய மக்களாக இருந்திருக்க வேண்டும். நடுக் காலங்களின் போது தான் ஈரானிய பாஷ்தூ மொழி பேசும் பழங்குடியினங்களுடன் இவர்கள் இணைந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads