கலாட்டா கல்யாணம்

சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கலாட்டா கல்யாணம்
Remove ads

கலாட்டா கல்யாணம் (Galatta Kalyanam) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] சித்ராலயா கோபு எழுத்தில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் கலாட்டா கல்யாணம், இயக்கம் ...

இப்படமானது 1965 இந்தியா பாக்கித்தான் போரின்போது போர் நிதி திரட்டும் விதமாக சித்ராலயா கோபு எழுதி சிவாஜி கணேசன் இயக்கி, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் நடித்த கலாட்டா கல்யாணம் என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு அதேபெயரில் சிவாஜி கணேசனின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும்.[2]

Remove ads

கதைச்சுருக்கம்

நான்கு பெண்களைப் பெற்ற ஒரு தந்தை, தன் பெண்களுக்கு வரன் பார்க்கும் வேலையை அவரது இரண்டாவது பெண்ணின் காதலனிடம் ஒப்படைக்கிறார். முதல் பெண் ஆண்களை வெறுப்பவர். மூன்றாவது பெண் இசைப் பைத்தியமாகவும், நான்காவது பெண் சினிமா பைத்தியமாகவும் இருக்கின்றனர். வெவ்வேறு குணாம்சங்கள் கொண்ட இந்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் இரண்டாவது பெண்ணின் காதலன் ஈடுபட்டு அதனால் ஏற்படும் சிரமங்களே படத்தின் கதை.

விமர்சனம்

திரைப்படத்தின் நகைச்சுவையான வசனங்களுக்காகவும் குழப்பமில்லாத இயக்கத்திற்காகவும் கல்கி பத்திரிகை பாராட்டி இருந்தது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads