கலால் வரி (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மத்திய கலால் வரி (Central Excise Duty) மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் செயல்படும் மத்திய கலால் மற்றும் சுங்கத் துறையினரால் விதிக்கப்படுகிறது. கலால் வரி என்பது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மறைமுக வரியாகும்.

மத்திய கலால் வரி என்பது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி ஆகும். கலால் வரி உற்பத்திப் பிரிவிலிருந்து ஒரு கிடங்கிற்கு பொருட்கள் மாற்றப்படும்போது செலுத்தப்படுகிறது. 1944 மத்திய கலால் சட்டம் மற்றும் 1985 மத்திய கலால் கட்டணச் சட்டத்தின் கீழ் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் செயல்படும் மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை இவ்வரியை வசூலிக்கும் இந்திய அரசின் அமைப்பாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படுத்தியப் பின்னர், தற்போது மத்திய கலால் வரியானது பெட்ரோலியப் பொருட்கள், மதுபானம், புகையிலை போன்ற சில பொருட்களுக்கு மட்டுமே வசூலிக்கப்படுகிறது.[1]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads