கலிங்கப்பட்டினம் கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிங்கப்பட்டினம் கடற்கரை என்பது ஆந்திர மாநிலம் சிறீகாக்குளம் மாவட்டத்தில் வம்சதாரா ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை சிறீகாகுளம் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
நிர்வாகம்
ஆந்திரப் பிரதேச மாநில அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (APTDC) இந்தக் கடற்கரையை சுற்றுலா மையமாக அங்கீகரித்து இதன் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.[1]
முக்கியத்துவம்
இதுவொரு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட துறைமுகம் ஆகும். இங்கு ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. இத்துறைமுகத்தில் வாசனைத் திரவியங்கள், துணிகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இத்துறைமுகம் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியின் போது மூடப்பட்டது. .[2][3] இந்தக் கடற்கரைக்குச் செல்லும் சாலை கடற்கரைப் படுகை வரை செல்வதால் அது திறந்த சாலைக் கடல் (Open Road Sea) என அழைக்கப்படுகிறது.[4]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads