கலையுருக்காட்டி

From Wikipedia, the free encyclopedia

கலையுருக்காட்டி
Remove ads

கலையுருக்காட்டி (Kaleidoscope) என்பது கண்ணாடிகளை உட்பக்கம் கொண்டிருப்பதன் மூலம் அவற்றுக்கு இடையே உள்ள நிறமான அழகிய பொருட்கள் மூலம் விந்தையான உருவங்களைத் தோற்றுவிக்கும் ஒரு விளையாட்டுக் கருவியாகும். இதன் ஒரு பக்கத்திலிருந்து பார்வையாளர் நோக்கும் போது எதிர்ப்பக்கத்தில் இருந்து வரும் ஒளி சமச்சீர் அமைப்புடைய வடிவியல் சார்ந்த உருவங்களை ஒளித்தெறிப்பு மூலம் உருவாக்கும். கலையுருக்காட்டியைப் பார்த்துக்கொண்டே உருளச் செய்வதன் மூலம் முடிவற்ற சமச்சீரான வடிவமைப்புகள் தோன்றும். இதனை 1817 ஆம் ஆண்டு கண்டுபிடிப்பாளர் டேவிட் பிரூச்டர் உருவாக்கினார்.[1]

கலையுருக்காட்டியின் உட்புறத்தோற்றம்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads