கலைவாணர் அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலைவாணர் அரங்கம் சென்னை (தமிழ்நாடு, இந்தியா) வாலாஜா சாலையில் அமைந்துள்ளது. திரையுலக நகைச்சுவை நடிகரும், முன்னாள் திராவிட கழக மேடை பேச்சாளருமான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் என்பவரின் பெயரால் அவரது நினைவாக அவர் ரசிகரும், அரசியல் சகாவும், தமிழக முன்னாள் முதல்வரான கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த அரங்கம் தற்போது முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கம் (A/C Maal) ஆக செயல்பட்டுவருகிறது. இந்த அரங்கத்தில் முதல் மற்றும் இரண்டாவது பார்வையாளர் அடுக்கில் 1,100 நபர்களுக்கும் மற்றும் மூன்றாவது பார்வையாளர் அடுக்கில் 1,300 நபர்களுக்குமான இருக்கைகளை கொண்டுள்ளது.[1]

Remove ads
வரலாறு
- மேலும் கலைவாணர் அரங்கம் ஆனது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது அரசியல் தோல்வி காலத்திலும், மனவெறுப்பு, துயர் ஏற்படும் நேரத்திலும், தன்னை ஆறுதல் படுத்தி கொள்ள பல தமிழ் இலக்கிய அரங்கமும், நகைச்சுவை அரங்கத்தையும், தனது (திமுக) கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தலைமை பேச்சாளராக கலைஞர் கருணாநிதி பேசி மகிழ்வார்.
- இந்த அரங்கத்தில் கலைஞர் கருணாநிதியின் கலைநயமிக்க பேச்சானது அரசியலையும், பழங்கால புராண உதாரணத்தையும் கலந்து பேசி பொது வாழ்வியலுக்கு சாதாரண மனிதனுக்கு கூட மன சோர்வு நீங்கும் விதமான பேச்சை இந்த கலைவாணர் மன்றத்தில் நடத்துவார்.
- மேலும் கலைஞர் கருணாநிதியின் மனதிற்கு ஆறுதல் செய்யும் மற்றோரு தாய் மடியாக கலைவாணர் அரங்கம் இருந்தது என்றும் கூறுவார்கள்.
- முதலில் 1952 இல் ஒரு சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது, சட்டமன்றம் இங்கிருந்து செயல்பட்டது. 1974 இல், அப்போதைய முதல்வர் கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட அரங்கத்தை தொடங்கி வைத்தார். அரங்கம் பின்னர் இடிக்கப்பட்டு மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 2016 இல் தற்போதைய அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.[2]
- மேலும் 2020–2021 இந்தியா மற்றும் தமிழகத்தில் நிலவிய கோரோனா பெரும் தொற்றின் போது தமிழக சட்டமன்ற பொது கூட்டம் கலைவாணர் மன்றத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
