கல்லடிப் பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஓர் பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலம், உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னான காலங்களில் 'பாடுமீனின்' இசையை கேட்க உதவியது.
சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது.
Remove ads
புதிய கல்லடிப் பாலம்
தற்கால போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய முடியாமல் கல்லடிப் பாலம் காணப்படுவதால், இதற்கு அருகாமையில் புதிதாக ஓர் பாலம் 2.6 பில்லியன் (இலங்கை) ரூபா (அ.டொ. 20 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டு 22 மார்ச்சு 2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. சப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகவரினால் கடனுதவி அளிக்கப்பட்டு கட்டப்பட்ட இதன் நீளம் 288.35 மீ (946 அடி), அகலம் 14 மீ (46 அடி) ஆகும்.[2][3][4]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads