கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
பிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் 16-ஆம் நூற்றாண்டில் கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குலசேகரமுடையார் கோயிலைக் கட்டினார்.[2]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் குலசேகரமுடையார், அறம்வளர்த்தநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடிப்பூரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
நடராஜர் சிலை
1982-இல் களவாடப்பட்ட இக்கோயிலின் பஞ்சலோக நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்ததை, காவல்துறை சிலை தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.[4].[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads