கல்வயல் வே. குமாரசுவாமி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கல்வயல் வே. குமாரசாமி (சனவரி 1, 1944 - திசம்பர் 10, 2016) ஈழத்துக் கவிஞர், கல்வியாளர். சிறுவர் பாடல்கள், கவிதைகள் படைத்துள்ளார்.[1] தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்டவர். இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் வட மாகாணத்தில் சாவகச்சேரியில் கல்வயல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சங்கத்தானையில் வாழ்ந்து வந்தவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றினார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராக சில காலம் தமிழ் போதித்தார்.

இவர் சிறு வயதில் இருந்தே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். மரபு மற்றும் புதுக்கவிதையில் ஆளுமை பெற்றவராகவும் குழந்தைப் பாடல்களை எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார்.

Remove ads

விருதுகள்

  • இந்து சமயப் பேரவையின் கவிமாமணி விரந்து (2000)
  • கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது (2009)
  • மகரந்தச்சிறகு விருது (2011)
  • உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டு விருது (2012)
  • தென்மராட்சிப் பிரதேச செயலகத்தின் கலைச்சாகரம் விருது (2014)
  • வட மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர் விருது (2015)
  • கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் காவ்யபிமானி விருது (2016)

வெளியான நூல்கள்

  • சிரமம் குறைகிறது
  • மரண நனவுகள்
  • பாப்பாப்பா
  • பாடு பாப்பா
  • பாலர் பா
  • முறுகல் சொற்பதம்[1]
  • கல்வயல் வே.குமாரசுவாமி கவிதைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads