கல்விக்கூடம்

From Wikipedia, the free encyclopedia

கல்விக்கூடம்
Remove ads

கல்விக்கூடம் அல்லது கல்விக்கழகம் (Academy) கிரேக்க நாட்டு பேரறிஞரான பிளேட்டோ ஏதென்சு நகரத்தின் வெளிப்புறத்தோட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். அத்தோட்டம் அக்காடமசு என்ற கிரேக்க வீரனுடையது. அவன் பெயரை வைத்து அப்பள்ளிக்கூடத்தை அக்காதமி என்று அழைத்தனர். பிறகு அகாதமி என்ற சொல் கல்வியாளர்களைக் கொண்ட குழுவையும், அவர்கள் கூடும் இடத்தையும் குறிக்கலாயிற்று. பிளாட்டோ 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வசித்தாலும், பிற நாட்டு அரசர்களும், அரசுகளும் தங்கள் நாடுகளில் கல்விக்கூடங்களைத் தோற்றுவித்தன. 1635 ஆம் ஆண்டில், பிரஞ்சு கல்விக்கூடம், கார்டினல் ரிக்கலோ (Richelieu) என்வரால் பிரஞ்சு நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் அரச கல்விக்கூடம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் கல்விக்கூடம், சென்னையில் 34 ஆண்டுகளுக்கு முன், அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.[1]

Thumb
ஏதன்ஸ் கல்விக்கூடம்
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads