கல்விமலர்

From Wikipedia, the free encyclopedia

கல்விமலர்
Remove ads

கல்விமலர் என்பது தமிழ், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் கல்வித் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் 2008 மே 9 ஆம் தேதி முதல் இயங்கத்தொடங்கிய இணையத்தளம் ஆகும்.

விரைவான உண்மைகள் வலைத்தள வகை, உருவாக்கியவர் ...
Remove ads

நோக்கம்

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை தேர்வு செய்யவும், சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது.

தகவல் சேகரிப்பு

இத்தளத்தில் உள்ள தகவல்களை வல்லுனர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் தேடித் தொகுத்துள்ளனர். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த இணையத்தளத்தை கல்வி ஆர்வலர் இல. ஆதிமூலம் தலைமையில், ஆறு பேர் கொண்ட நிர்வாகக்குழு இயக்கி வருகிறது. நூறு பேர் கொண்ட குழு இதற்கான தகவல்களை மூன்று மாதங்களாக வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தகவல்களைத் தேடி தொகுத்துள்ளனர்.

சேவைகள்

கல்வித் துறையில் பல்வேறு வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளவும், ஐயங்களை தீர்த்துக் கொள்ளவும் இந்த இணையத்தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், வேலை வாய்ப்புக்குத் தகுதிப்படுத்தும் படிப்புகள் பற்றியும் இத்தளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் வகையில் இத்தளம் துவக்கப்பட்டிருந்தாலும் கூட, இளங்கலைப் படித்த பின்னர் படிக்கக்கூடிய, முதுகலை, சிறப்புப் படிப்புகள், தொழில் படிப்புகள், அரிய படிப்புகளின் தொகுப்புகள் உள்ளன.

கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள், ஏராளமான துறைகளில் புலமைப்பரிசில் பெறுவதற்கான முறைகள், நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கு மாதிரித் தேர்வு, வினா தொகுப்புகள், வெற்றி பெறுவதற்கான வழிகாட்டல்கள், கல்வித் துறையில் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கட்டுரைகள், பெற்றோர்களுக்கான குறிப்புகள் முதலிய தகவல்கள் இத்தளத்தில் உள்ளன.

கல்லூரிகளை ஒப்பிட்டு சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவும், முக்கியத் தேர்வுகளை குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டவும் இத்தளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads