கல் நாதசுவரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல் நாதசுவரம் கல்லால் ஆன நாதசுவரம் ஆகும்.

காலம்
இந்த கல் நாதசுவரம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ளது. [1] இக்கோயிலின் பண்பாட்டுப் பெட்டகங்களில் ஒன்றாக இந்த கல் நாதசுவரம் கருதப்படுகிறது. [2] பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல் நாதசுவரம் அமைக்கப்பட்டது. [3]
அமைப்பு
சாதாரண நாதசுவரத்ப் போல ஆறு பங்கு எடையுடையது. [4] மூன்று கிலோ எடையுள்ள இந்த நாதசுவரம் இரண்டரை அடி நீளமுடையதாகும். [3]
வாசிப்பு
இக் கோயிலில் மகாமகத் திருவிழா மற்றும் மாசி மகத் திருவிழாவின்போது இக் கல் நாதசுவரம் இசைக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இசைக்கலைஞர் திரு என். சாமிநாதன் இதனை வாசித்தார். அவரே மறுபடியும் 29 செப்டம்பர் 2017 அன்று ஆயுத பூசை, சரசுவதி பூசையை முன்னிட்டு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இதனை பண்டுரோதி, சண்முகபிரியா, தர்மவிதினி, ஹேமாவதி ஆகிய கீர்த்தனைகளில் ஒரு மணி நேரம் வாசித்தார். [3]
ஆஸ்தான வித்வான்
46 வருடங்களாக நாதசுவரம் வாசித்து வரும் இவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கலில் உள்ள தேவஸ்தான இசைப் பள்ளியில் பயின்றவர். கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம்பிள்ளை அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இவர், இக்கோயிலின் ஆஸ்தான வித்வானாக கடந்த 27 ஆண்டுகளாக இருந்து வருகிறார். [4]
மதுரை
மதுரையைச் சேர்ந்த மாணவர் கல் நாதசுவரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். வாய் வைத்து ஊதப்படுகின்ற சீவாளி தவிர அனைத்துப்பகுதிகளும் ஒரே கல்லால் ஆனது. மர நாதசுவரத்தில் வெளிப்படுகின்ற இனிமையான ஒலி இந்த நாதசுவரத்திலும் உருவாகிறது. [5]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads