களஞ்சியம்

From Wikipedia, the free encyclopedia

களஞ்சியம்
Remove ads

களஞ்சியம் (silo) ( Greek σιρός – siros, " கூலத் தேக்கக் குழி") பேரளவான பொருட்களைத் தேக்கிவைப்பதற்கான கட்டமைப்பு ஆகும். இவை வேளாண்மையில் கூலங்களைத் தேக்கிவைக்க பயன்படுகின்றன (காண்க, கூலப் பதன்கலம்). நொதித்த தீவனத்தைத் தேக்கிவைக்கவும் இவை பயன்படுவதுண்டு. இவை வழக்கமாக பேரளவு கூலங்களைத் தேக்கிவைக்கவே பயன்படுகின்றன. இவை பேரளவு நிலக்கரி, பைஞ்சுதை, கரித்துண்டுகள், விறகுகள் உணவுப் பொருட்கள் உமி போன்றவற்றையும் தேக்கவும் பயன்படுகின்றன. இன்று மூவகைக் களஞ்சியங்கள் வழக்கில் உள்ளன. அவை கோபுரவகைக் களஞ்சியங்கள், குழிவகைக் களஞ்சியங்கள், பைவகைக் களஞ்சியங்கள் என்பனவாகும்.

Thumb
எஃகுக் கூலக் களஞ்சியம், உரோல்சு, டெக்சாசு, ஐக்கிய அமெரிக்கா.
Thumb
கூலக் களஞ்சிய அணிகளால் ஆகிய கூலப் பதன்கலம், கைல்சு துறைமுகம், தெற்கு ஆத்திரேலியா
Thumb
களஞ்சியங்கள், அக்காட்லான், கிடால்கோ, மெக்சிகோ.

இன்று தகவல்களைத் தேக்கிவைக்கும் கணினி நினைவகங்களையும் களஞ்சியம் என்ற சொல் கொண்டு குறிப்பிடுவதுண்டு. எடுத்துக்காட்டாக தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம்.

Remove ads

களஞ்சிய வகைகள்

கோபுரவகைக் களஞ்சியம்

Thumb
கட்டப்பட்டுவரும் கற்காரை அடுக்குக் களஞ்சியம், 2015

தேக்கு களஞ்சியங்கள் உருளைவடிவக் கட்டமைப்புகளாகும். இவற்றின் விட்டம் 10 (3மீ) முதல் 90 (30மீ) அடிகளாகவும் உயரம் 30 (10மீ) முதல் 275 (90மீ) அடிகளாகவும் அமையும். கற்காரைக் களஞ்சியங்களே பெரிய விட்டத்துடனும் உயரத்துடனும் அமைகின்றன. இவை மரப்பலகங்கள் கற்காரைப் பலகங்கள், வார்ப்பிரும்புப் பாளங்கள், எஃகு பலகங்கள் போன்ற பலவகைப் பொருள்களால் செய்யப்படுகின்றன. எனவே, இவற்ரின் அடக்க விலையும் உழைதிறமும் காற்றுபுகாத் தன்மையும் வேறுபடுகின்றன. கூலம், பைஞ்சுதை, விறகு தேக்கிவைக்கும் களளஞ்சியங்கலில் இருந்து சரக்குந்துகளுக்கும் இணைப்புப் பெட்டிகளுக்கும் கடத்து பட்டைகளுக்கும் காற்றுச் சரிவாலோ துரப்பணங்களாலோ தேக்குபொருட்கள் இறக்கப்படுகின்றன.

சிறுகள அறைகள் அமைந்த கோபுரவகைக் களஞ்சியங்கள் மேலடுக்கு வழியாக 4 முதல் 12 பற்கூர்கள் உள்ள முறத்தால் சுமையிறக்கப்படுகின்றன. முதலில் கையால் மட்டுமே இறக்கப்படும். தற்காலத்தில் எந்திரவகைச் சுமையிறக்கிகள் பயன்படுகின்றன. தரையிடச் சுமையிறக்கிகளும் பயன்படுத்தவதுண்டு. ஆனால், அவை அடிக்கடி பழுதுறுகின்றன.

கோபுரக் களஞ்சியத்தின் மேம்பாடு சிறு அறைக்களங்கள் திணிப்பு வேலையையும், மேல் சில அடி உயரந்தவிர, தாமே செய்துவிடுகின்றன. விறகைத் தேக்குதலைப் பொறுத்தமட்டில் கோபுரக் களஞ்சியம் குறைபாடானதே. கோபுரவகைக் களஞ்சியத்தை முதன்முதலாக பிராங்ளின் கிராம் கிங் வடிவமைத்தார்.

கனடாவிலும் ஆத்திரேலியாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பல பேரூர்களில் அல்லது கூலப் பயிரிடும்வட்டாரங்களில் உள்ள உழவர்களும் பண்ணைக்காரர்களும் மரத்தாலான அல்லது கற்காரையாலான கோபுரக் களஞ்சியத் தொகுதிகளை (இவை கூலப் பதன்கலங்கள் எனப்படுகின்றன.) பொதுவில் வைத்து சூழவுள்ள நகர்களிலும் பேரூர்களிலும் விளையும் கூலங்களைத் தேக்கிவைக்கின்றனர். பிறகு அவற்றைச் செயல்முறை நிலையங்களுக்கு அல்லது கப்பலில் ஏற்றுமதி செய்யவும் சரக்குந்துகளிலோ தொடர்வண்டிக்ளிலோ அனுப்புகின்றனர். பேரளவு அறுவடைக் காலங்களில் உள்ள உபரிக் கூலங்களை குவியல்களாக வெளியே தேக்கி வைக்கின்றனர். இதனால் கணிசமான இழப்புகள் ஏற்படுகின்றன.

கற்காரைப் பலகக் களஞ்சியங்கள்

Thumb
உயரமான கற்காரைக் களஞ்சியம். இடைமிடையப்பட்ட கற்காரைப் பலகங்களும் பலக ஓரங்களில் பிணைக்கப்பட்டட அடிவலயங்களும் காட்டப்பட்டுள்ளன.
Thumb
சிறுபலகக் களஞ்ச்சியம். இவற்றை மேலும் அடிவலங்களால் உயரப்படுத்தலாம்மடியடுக்குப் பலகங்களுக்கு கூடுதல் வலயங்களால் வலிமையூட்டல் காட்டப்ப்பட்டுள்ளது.

கற்காரையடுக்குக் களஞ்சியங்கள் சிறிய முன்வார்ப்பு கற்காரைப் பலகங்களால் கட்டியமைக்கப்படுகின்றன. இவற்றின் விளிம்புகளில் பூட்டிக்கொள்ளவல்ல முகடுகளும் காடிகளும் அமைந்திருக்கும். எனவே ஓர் உயர்வலிமைக் கோபுரக் கூடு இவற்றால் அமைக்க முடிகிறது. கற்காரை இழுப்பை விட அமுக்கத்தில் வலைமையாகச் செயல்படும். எனவே, களஞ்சியம் கோபுரத்தைச் சுற்றியமைந்த எஃகு வலயத்தால் வலுவூட்டப்படுகிறது. இது பலக அடுக்கைச் சுற்றிலும் நன்றாக அமுக்கி இறுக்கமான வலயத்தை உருவாக்கும். குத்துநிலை அடுக்குகள் பலக முனைகளின் இடைமிடைவால் ஒவ்வொரு அடுக்கின் சுற்றிலும் சிறுதொலைவுக்கு ஒன்றாகச் சேர்த்து பிடித்துக் கொள்ளப்படுகின்றன. பலக விளிம்புகளை வலயங்கள் நேரடியாகக் கெட்டியாக இறுக்கி பிடிக்கின்றன.

குறைந்த உயிரகமுள்ள (ஆக்சிஜன் உள்ள) கோபுரக் களஞ்சியங்கள்

Thumb
குறைந்த உயிரகமுள்ள (ஆக்சிஜன் உள்ள) கோபுரக் களஞ்சியங்கள்

களஞ்சியத்தின் மேலடுக்குகளில் பூஞ்சைபிடித்து சிதைவுறாதபடி நொதித்த பொருட்களை உயர்தரத்தில் வைக்க குறைந்த உயிரகமுள்ள (ஆக்சிஜன் உள்ள) கோபுரக் களஞ்சியங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பொருள் ஏற்றும்போது மட்டுமே நேரடியாகத் திறக்கப்படும். மேலும் சுமை இறக்கும்போது கூட காற்று புகாதவண்ணம் அடைத்தே வைக்கப்படும்.

குழிவகைக் களஞ்சியம்

Thumb
நிரப்பித் திணித்த பேழைவகைக் களஞ்சியம்.

குழிவகைக் களஞ்சியங்கள் கற்காரைச் சுவர்கள் அமைந்த பள்ளங்களாகும். இவை இழுபொறிகளாலும் சுமையேற்றிகளாலும் நிரப்பி அடைக்கப்படுகின்றன. நிரப்பிய பள்ளம் நெகிழிக் கித்தான்களால் காற்ரு புகாதவாறு மூடப்படுகின்றன. இவை இழுபொறிகளாலும் சுமையேற்றிகளாலும் சுமையிறக்கப்படுகின்றன. இவை செலவு மிக்கவை. எனவே மிகப் பேரளவு தேக்கங்களுக்கே ஏற்றவை.

பைவகைக் களஞ்சியம்

Thumb
நிரப்பித் தைக்கப்பட்ட 8 அடி விட்டமும் 150 அடி உயரமும் உள்ள களஞ்சியப் பை.

பைவகைக் களஞ்சியங்கள் 6 அடி(2.4மீ) முதல் 12 அடி(3.6மீ) விட்டமுள்ள உயரெடை நெகிழிக் குழாய்கள் ஆகும். இதன் நீளம் தேக்குபொருளின் அளவைப் பொறுத்து மாறும். இவை எந்திரத்தால் நிரப்பி இருபுறமும் அடைக்கப்படுகின்றன. இவை இழுபொறிகளாலும் சுமையேற்றிகளாலும் சுமையிறக்கப்படுகின்றன அல்லது நழுவற் சுமையேற்றியால் சுமையிறக்கப்படும். சுமையிறக்கும்போது சுபை கிழிவதால் வெளியில் எறியப்படும். இவை செலவு குறைந்தவை. ஈவை இட நெருக்கடியுள்ள வளர்ச்சி/அறுவடை நிலைமைகளில் தற்காலிகமாக பயன்படுத்தலாம். என்றாலும் பல பண்ணைகள் இவற்றை ஒவ்வோராண்டும் பயன்படுத்துகின்றன.

கலன்கள்

Thumb
இந்தக் களஞ்சியக் கலன் கல், மணல், சரளையாலான 27 வேறுபாடுகளைக் காட்டுகிறது, கோப்பனேகன், டென்மார்க்

கலன்வகைக்களஞ்சியங்கள்[1] என்பவை சற்றே சிறியவகைக் களஞ்சியங்களாகும். இது பைஞ்சுதை அல்லது கூலங்களைத் தேக்க பயன்படுகின்றன. தேக்கும் முன் கூலங்கள் கூல உலர்த்தியால் உலர்த்தப்படும்.[2]. இவை வட்டவடிவிலோ சதுரவடிவிலோ அமையலாம். ஆனால், வட்டவடிவக் கலன்களே காலிசெய்ய எளியவை. சதுரவடிவக் கலன்களின் மூலைகளில் தங்கும் கூலத்தை காலிசெய்ய கூடுதலான முயற்சி தேவையாகும்.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads