கழறிற்றறிவார் நாயனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேரமான் பெருமாள் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. இவர் சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு கி.பி. 871 ஆண்டுகளைச் சார்ந்து அரசாண்டு வந்தார்[2][3]. பெருமாக்கோதையார் என்ற இயற்பெயரும் கழறிற்றிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்ற இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டபோது சேரமான் பெருமாள் நாயனார் என வழங்கப்பட்டார். இவர் சிவ பூசையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் கழறிற்று அறிவார் [4] எனப் போற்றப்பட்டார் என்றும் பெரியபுராணம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads