கவசம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பண்டைய காலங்களில் போருக்கு செல்லும் அரசர்களும் வீரர்களும் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்திய இரும்பிலான பாதுகாப்பு உடைகள் கவசம் எனப்பட்டது. இந்தக் கவசம் உடலில் மார்புப்பகுதி, தலைப்பகுதி போன்றவைகளின் பாதுகாப்பிற்கே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

கவச வகைகள்

உயிரின் பாதுகாப்புக்கும், உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் அது எவ்வித சேதமுமடையாமல் பாதுகாப்பதற்கும் பல்வேறு கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உடல் கவசம்

மார்புக் கவசம்

தலைக்கவசம்

Thumb

பண்டைய காலப் போரில் வாள், ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்களைக் கொண்டு எதிரியைத் தாக்கிக் கொல்லும் போர்முறை வழக்கத்தில் இருந்தது. இதனால் தலையைப் பாதுகாப்பதற்காகத் தலைக்கவசம் அணியப்பட்டது.

தற்காலப் பயன்பாடு

தற்காலத்திலும் இதுபோன்ற கவசங்கள் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பிற்காக பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் போன்றவர்கள் தலைக்கவசங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிக அளவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பதால் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது அவசியம் என்று இந்தியாவில் பல மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்துள்ளன.

Remove ads

சில நாட்டு தலைக்கவச வடிவங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads