கவைட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கவைட் (Cavite) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் இமுஸ் ஆகும். இதுவே பிலிப்பீன்சின் அதிக சனத்தொகை கொண்ட மாகாணம் ஆகும். 1614 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 829 கிராமங்களும், 16 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜீசஸ் கிறிஸ்பின் ரெமுல்லா (Jesus Crispin Remulla) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,574.17 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கவைட் மாகாணத்தின் சனத்தொகை 3,678,301 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 67ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 1ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு சவகானோ ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் முக்கிய ஏழு ஆறுகள் ஓடுகிண்ரன. அத்துடன் இம்மாகாணத்தின் சனத்தொகை கூடிய மாநகராட்சியாக கவைட் நகரம் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads