கசுப்பியன் கடல்
ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கிடையிலுள்ள உள்நாட்டு ஏரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
காசுப்பியன் கடல் (Caspian Sea) உப்புநீர் கொண்டதால் கடலென்று சொல்லப்பட்டாலும் இது ஓர் ஏரியாகும். உலகிலேயே மிகப் பெரிய ஏரி இதுவே.[2][3] 317,000 சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. இவ் ஏரியில் அதிக ஆழம் கொண்ட இடத்தில் 1025 மீட்டர் (3,363 அடி) ஆழம் உள்ளது. இதில் உள்ள நீரானது சுமார் 1.2% உவர்ப்புத் தன்மை (உப்புத்தன்மை) கொண்டுள்ளது. இது ஆழ்கடல்களின் உவர்ப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசக்ஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்டது.
இவ்வேரி முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என அறிவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்டதாக இது 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மாறியது.
இவ்வேரியில் வாழும் ஸ்ரர்ஜியோன் எனும் மீனின் சினையே கவியார் என்ற பிரபல உணவு வகையாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதிகளவு பிடிக்கப்பட்டதால் இவ்வகை மீனினம் அரிதாகி வருகிறது. அதிகளவு மீன்பிடிப்பைத் தடுத்து அம் மீனினத்தை பழைய எண்ணிக்கைக்குக் கொண்டு வர அறிவியலாளர் முயல்கின்றனர்.
இவ்வேரிக்கு அருகில் வாழந்த ஆதிகாலமக்கள் கஸ்பியன் கடலை ஒரு சமுத்திரமாக கருதினார்கள்.பெரும்பாலும், இதன் உவர்ப்புத்தன்மையும்,எல்லையற்றுக் காட்சியளிக்கும் தோற்றமும் இதற்கு காரணமாகும்.
Remove ads
பெயர் வரலாறு
காசுப்பியன் என்ற சொல் கஸ்பி(பாரசீகம்:کاسپی)என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.ஆதிகாலமக்கள் டிரான்ஸ்கெளகேசியா பகுதயின் தென்-மேற்குப்பகுதயின் கடல்பகுதயில் வாழ்ந்துள்ளனர்.[4] காசுப்பியேன் பிரதேசம் அல்பேனிய நாட்டவர்களுக்கு சொந்தமானது என ஸ்டர்பு(Strabo) எழுதுகிறார்.இது காசுப்பியன் கோத்திரத்துக்குப்பின்னர் இப்பெயர் வழங்கப்பட்டதுடன்,கடலொன்றும் காணப்பட்டது.ஆனால் தற்போது அக்கோத்திரம் மறைந்துவிட்டது.[5] மேலும், காசுப்பியன் வாயில்கள்( Caspian Gates)இது ஈரானின் தெஹ்ரான் மாகாணத்தில் ஒரு பிரதேசத்தை குறிக்கின்றது ,அவர்கள் கடலின் தென் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தமைக்கு இது ஒரு சாத்தியமான சான்றாகும். ஈரானின் கஸ்வின் நகரம் அதன் பெயரை கடலுடன் பகிர்ந்துள்ளது.உண்மையில்,பஹ்ர் அல் கஸ்வின்(கஸ்வினின் கடல்) என்ற பாரம்பரிய அரபுமொழி பெயரால் அது அழைக்கப்படுகின்றது.[6]
Remove ads
பெளதீக பண்புகள்
உருவாக்கம்

ஏரல்கடல் மற்றும் கருங்கடல் போலவே காசுப்பியன் கடலும் ஆதிகால பரடிதிஸ் கடலில் (Paratethys Sea) எஞ்சியிருக்கும் ஒரு பகுதியாகும்.ஏறத்தாள 5.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டெக்டானிக் பிளவு மேல்நோக்கி தள்ளப்பட்டு ஒரு கடல் மட்டத்தில் விழுந்ததன் காரணமாக நிலத்தால் சூழப்பட்ட பகுதி உருவானது.[7] தற்போதைய நன்னீர் உட்பாய்ச்சலின் காரணமாக காசுப்பியன் கடலின் வடபகுதியில் நன்னீர் ஏரியாகக் காணப்படுகின்றது.இது ஈரான் கடற்கரைப் பகுதியில் மிகவும் உவர்த்தன்மையாக காணப்படுகின்றதுடன்,அங்கே நீர்பிடுப்பு மடுக்கள் சிறு ஓட்டத்துக்கு பங்களிப்புச்செய்கின்றது.காசுப்பியனின் உவர்தன்மையானது புவியில் உள்ள சமுத்திரங்களின் உவர்தன்மையின் மூன்றில் ஒரு பகுதியாகும்.[2]
புவியமைப்பு

உலகில் மிகப்பெரும் உள்நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்ப்பிரதேசமாக காசுப்பியன் கடல் காணப்படுவதுடன், உலகில் 40-44சதவீதமான ஏரிகளைச்சார்ந்த நீரப்பரப்பையும் கொண்டுள்ளது.[8] காசுப்பியன் கடலின் கரையோரப் பகுதிகளாக அஸர்பைஜான்,ஈரான்,கசக்ஸ்தான்,ரஷ்யா மற்றும் துருக்மேனிஸ்தான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.காசுப்பியன் மூன்று பெளதீக பிரதேசங்களாக பிரிக்கப்படுகின்றது.அவை வடக்கு,மத்திய,தெற்கு காசுப்பியனாகும்.[9] இதன் வடமத்திய எல்லையில் மங்கிஷல்க் வாசல்(Mangyshlak Threshold) அமைந்துள்ளது.இது சீசன்தீவு மற்றும் கேப் திபு கர்கன் ஊடாகச் செல்கின்றது.இதன் தென்மத்திய எல்லை அப்சிரோன் வாசலாகும்,இது ஆசிய-ஐரோப்பா கண்டகங்களுக்கிடையில் மற்றும் ஓர் எஞ்சியிருக்கும் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள ஒரு டெக்டானிக் பிரதேசமாவதுடன்[10] , அது ஸிலோலி தீவு மற்றும் கேப்கூலி ஊடாகச் செல்கின்றது.[11] கராபோகாஸ்கோல் வளைகுடவானது காசுப்பியனின் கிழக்கு உள்வழி உவர்நீர்ப்பபகுதியாவதுடன், இது துருக்மேனிஸ்தானின் ஒரு பகுதியாகும்.
மூன்று பிரிவுகளுக்கும் இடையிலான பிரதேசம் வியக்கத்தக்கதாகும்.காசுப்பியனின் வடபிரதேசம் மாத்திரமே தட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன்,அது மிகவும் ஆழமற்றதாகும்.அப்பகுதி 5-6மீற்றர் (16-20 அடி)வரையிலான சராசரி ஆழத்துடன், மொத்த நீரின் கனவளவின் ஒரு சதவீதத்தையே கொண்டுள்ளது.காசுப்பியனின் மத்தியபகுதயில் சராசரி ஆழம் 160மீற்றர்(620 அடி)ஆகும்.தென் காசுப்பியன் பிரதேசம் சமுத்திரங்கைளப் போன்று அதிக ஆழமானது.அதன் சராசரி ஆழம் 1000மீற்றர்களாகும்(3,300 அடி).மத்திய சாசுப்பியன் பிரதேசமானது நீரின் மொத்தக்கனவளவின் 33-66 சதவீத கனவளைவைக் கொண்டுள்ளது.காசுப்பியன் கடலின் வட பிரதேசமானது பொதுவாக குளிர்காலத்தில் உறைந்து பனிக்கட்டியாக மாறும்.மேலும்,காசுப்பியன் கடலின் தென்பகுதியும் குளிர்காலத்தில் பனிக்கட்டியாக மாறும்.[12]
ஏறத்தாள 120நதிகள் காசுப்பியனை நோக்கி உட்பாய்கின்றன. இதில் வோல்கா ஆறு மிகப்பெரியதாகும்.இரண்டாவது செழிப்பான,ஊறல் நதியானது வடபகுதயில் இருந்து பாய்கின்றது.மேலும், கூரா நதியானது மேற்குப் பகுதியில் இருந்து காசுப்பியன் கடலில் சங்கமிக்கின்றது. காசுப்பியன் பல சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது.இவை காசுப்பியனின் வடபகுதியில் நிலையாக அமையப்பெற்றுள்ளதுடன்,இந்நிலப்பரப்பு ஏறத்தாள 770சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்டுள்ளது.[2]
காசுப்பியன் கடல் முழுவதும் எண்ணற்ற தீவுகள் காணப்படுவதுடன்,அவை அனைத்தும் கடற்கரைகளை அண்மித்து காணப்படுகின்றன.இத்தீவுகள் ஒன்றும் ஆழமான பகுதிகளில் இல்லை.இதில் ஒகுர்ஜா அடா என்பதே பெரிய தீவாகும்.இத்தீவானது 37கிலேமீற்றர்(23மைல்) நீளமுடையது.வட காசுப்பியன் பகுதியில் உள்ள பெரும்பாலான தீவுகள் மனிதர்கள் வாழத்தகுதியற்றவையாக காணப்படுகின்றன.எனினும்,டியுலேனி அர்ச்சிபெலாகோ மற்றும் முக்கிய பறவைகள் பிரதேசம் போன்ற சில தீவுகளில் மனிதக்குடியேற்றங்கள் காணப்படுகின்றன.
நீர் வள இயல்

காசுப்பியன் கடல்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றுக்குரிய பண்புகளைக் கொண்டுள்ளது.இது பொதுவாக உலகின் மிகப்பெரிய ஏரி என்ற பட்டியலில் சேர்க்கப்படுகின்றது.எனினும், இது நன்னீர் ஏரி அல்ல. பல நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக காசுப்பியனின் நீர்மட்டம் கூடி,குறைந்தவாறு காணப்படுகின்றன.பல நூற்றாண்டு காலமாக காசுப்பியனின் கடல் மாட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் வோல்கா ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவில் தாக்கம் செலுத்திவருகின்றனதுடன், இது காசுப்பியனின் பரந்த நீர்பிடுப்பு மடுவின் மீதான மழைவீழ்ச்சி மட்டத்தில் தங்கியுள்ளது.இறுதியாக குறுகிய காலத்தில் கடல்மட்ட வட்டம் 1929 முதல் 1977 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) கடல்மட்ட குறைவால் தொடங்கியது.இது 1997 முதல் 1995 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) ஆல் கடல்மட்டம் அதிகரித்தது.அன்று சிறியஅளவிலான ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்துள்ளன.[13]
Remove ads
வரலாறு
காசுப்பியன் கடைலச்சுற்றி வாழந்த ஆரம்பகால மனிதர்கள் ட்மானிசி(Dmanisi) குடியேற்றத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஏறத்தாள 1.3மில்லியன் வருடங்களுக்கு வாழந்த ஹோமோ இரகேஸ்டர்களின் (Homo ergaster)வழித்தோண்றல்களாவர்.நீண்ட காலங்களுக்குப் பின்னர் ஜோர்ஜியா மற்றும் அஸர்பைஜனின் குதாரோ,அஸ்கி குகை போன்ற குகைப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் காசுப்பியன் கடலைச் சுற்றிய பகுதிகளை ஆக்கிரமித்ததற்கு சான்றுகள் உள்ளன.காசுப்பியனின் தென்பகுதியை மேற்கு அல்போஸைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதற்கான சான்று உள்ளது.[14] காசுப்பியன் பிரதேசமானது சக்தி மூலங்களை அதிகளவில் கொண்ட வளமான பகுதியாகும்.10ஆம்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் பல கிணறுகள் தோண்றப்பட்டுள்ளன.[15]
1950ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க முக்கிய துர்க்மன் கால்வாய் வெட்டப்பட்டது.இந்நீர் மார்க்கம் நீர்ப்பாசன தேவைகளுக்கன்றி, கப்பல் போக்குவரத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads