காசுலு லட்சுமிநரசு செட்டி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

காசுலு லட்சுமிநரசு செட்டி (Gazulu Lakshminarasu Chetty) (1806–1868) பிரித்தானிய இந்தியாவின் வணிகரும், சமூக, அரசியல் ஆர்வலரான இவர் மெட்ராஸ் மக்கள் சங்கம் எனும் அமைப்பை நிறுவி கிரசண்ட் எனும் செய்தி நாளிதழை முதலில் வெளியிட்டவர். சென்னை மாகாணத்தைத் தாண்டியும் அவர் புகழ் பரவியவதிற்கு, வணிகத்தைவிட முக்கியமான காரணங்கள் சமூகப் பணிகளும் அரசியல் செயல்பாடுகளும்தான்.

விரைவான உண்மைகள் காசுலு லட்சுமிநரசு செட்டி, பிறப்பு ...
Remove ads

இளமை வாழ்க்கை

சென்னை பெரியமேட்டில், இண்டிகோ சாயத்தொழில் மற்றும் ஜவுளித் துறை வணிகரான சிந்துலு செட்டியாருக்கு 1806ல் காசுலு லெட்சுமிநரசு பிறந்தார். துவக்க பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த காசுலு லெட்சுமிநரசு செட்டியார் தனது தந்தை செய்து கொண்டிருந்த வணிகத்தில் ஈடுபட்டார். அத்துடன் பிரித்தானியர்களின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளையும் விவாதித்தார்.

இண்டிகோ சாயத்தொழில் மற்றும் ஜவுளித்துறையில் பெரும் வணிகரான சித்துலு செட்டியாருக்கு 1806ல் காசுலு லெட்சுமிநரசு செட்டி, சென்னையில் பிறந்தார். ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்த லெட்சுமிநரசு செட்டி, இளமையிலே குடும்ப வணிகத்தை மேற்கொண்டார். அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு அறக்கொடைகள் வழங்கினார். 1852ல் ’’மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன்’’ என்ற அமைப்பை நிறுவினார். சில ஆண்டுகள் கழித்து ஒரு பத்திரிக்க்கையை வாங்கி அதற்கு ``த கிரசென்ட்`` எனப்பெயரிட்டார்.

1854 ஆம் ஆண்டிலிருந்து வாரம் இருமுறை இதழாக அது வெளிவர ஆரம்பித்தது. கிறித்தவ மிஷனரிகளின் ‘தி ரெக்கார்டு’ என்ற பத்திரிகைக்கு எதிர்க் குரலாக ‘தி கிரசென்ட்’ பத்திரிகை வெளிவந்தது. கிறித்துவ மிஷனரிகள் குறித்து ``மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன்`` எனும் தமிழ் இதழ் துவக்கினார்.

அரசுப் பள்ளிகளில் விவிலியத்தை அறிமுகப்படுத்துவதைத் தடுப்பதில், அவரும் வழக்கறிஞர் ஜான் புருஸ் நார்ட்டனும் வெற்றி கண்டனர்.

புலனாய்வு இதழியலில் ‘தி கிரசென்ட்’ ஒரு முன்னோடி. இந்த இதழின் மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற எதிர்க் கட்சியைச் சேர்ந்த டேன்பி சேமோரை லட்சுமிநரசு இந்தியாவுக்கு வரச் செய்தார். உள்ளூர் விவசாயிகளை நிலபிரபுக்கள் எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை டேன்பி சேமோர் கண்டார். சேமோரை அழைத்துக் கொண்டுபோய் எல்லா அவலங்களையும் லட்சுமிநரசு காண்பித்தபோது நிலபிரபுக்களின் அட்டூழியங்களைக் கண்டு சேமோர் அதிர்ந்துபோனார். இதுகுறித்து பிரித்தானிய நாடாளுமன்றக் கீழவையில் கடுமையான கேள்விகளை சேமோர் எழுப்பினார். அதன் விளைவாக ‘விவசாயிகள் சித்ரவதை குறித்த கமிஷன்’ 1854இல் அமைக்கப்பட்டது. நிலைமையை மேம்படுத்த அந்த கமிஷனின் அறிக்கைகள் அதிகம் உதவவில்லை என்றாலும் தொழிலாளர்களின் நாயகனாய் லட்சுமிநரசு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்தது. ‘தி கிரசென்ட்’ இதழ் வெளியிட்ட புலனாய்வு கட்டுரைகள், செய்திகளின் பின்னணியில் அரசாங்கத்துக்குள் ஒரு கையாள் இருப்பதை ஆளுநர் கண்டறிந்தார். அந்தக் கையாள் மூலமாக ‘தி கிரசென்ட்’ இதழுக்கு ரகசியத் தகவல்கள் கசிவது தெரிந்ததும் அரசும் பிரித்தானியகாரர்களும் அந்த இதழுக்கு விளம்பரம் தருவதை நிறுத்திக்கொண்டார்கள். அந்த இதழை மூட வேண்டியதாக ஆயிற்று. உடனடியாக லட்சுமிநரசு ‘தி ரைஸிங் சன்’ என்ற இதழை ஆரம்பித்தார். அதன் மூலமாக எண்ணற்ற செயல்பாடுகளை மேற்கொண்டார்.

1863இல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக லெட்சுமிநரசு நியமிக்கப்பட்டார். இந்த சிறப்பைப் பெற்ற இரண்டாவது இந்தியர் இவர். [1]

Remove ads

மெட்ராஸ் மக்கள் சங்கம்

பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவன அரசின் நியாமற்ற செயல்களை எதிர்த்து குரல் கொடுக்க, கசுலு லெட்சுமிநரசு செட்டி, 1849ல் மெட்ராஸ் மக்கள் சங்கத்தை (Madras Native Association) நிறுவினார்.[2]

1852ல் இந்தியர்களின் குறைகளையும், பிரித்தானிய கிழக்கிந்திய அதிகாரிகளின் நியாமற்ற நடவடிக்கைகளையும் விவரமாகத் தொகுத்து பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு கடிதம் வாயிலாக அனுப்பினார். இக்கடிதத்தின் உள்ளடக்கங்கள் 25 பிப்ரவரி 1853 அன்று பிரபுக்கள் சபையில் விவாதிக்கப்பட்டது.

Remove ads

பெற்ற சிறப்புகள்

1861ல் லெட்சுநரசு செட்டி, ஆங்கிலேயர் வழங்கும் விருது போட்டியாக இந்தியாவில் இந்தியர்களுக்கு வழங்குவதற்காக Order of the Star of India எனும் விருதை நிறுவினார். 1863இல் செட்டியார் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இறப்பு

தனது அனைத்துச் செல்வங்களையும் சமூக, அரசியல் முன்னேற்ற நடவடிக்கைகளில் இழந்த லெட்சுமிநரசு செட்டி 1868ல் வறுமையில் இறந்தார்.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads