காச்சிபௌலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காச்சிபௌலி (gachibowli) என்பது இந்தியாவின் ஐதராபாத் நகரின் ஒரு புறநகராகும். ஐதராபாத் மும்பை பெருவழிச் சாலையில் அமைந்துள்ளது. இது இரங்காரெட்டி மாவட்டம் சிரிலிங்கம்பள்ளி மண்டலில் அமைந்துள்ளது. காச்சிபௌலியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரான ஐடெக் (HITEC ) நகருள்ளது. இவ்விரு நகரங்களுமே ஐதராபாத்தின் புறநகரங்களாகும். இந்நகரின் சிறப்பு இங்குள்ள கணினிமென்பொருள் நிறுவனங்களாகும். பன்னாட்டளவில் அறியப்பட்ட பெரும் மென்பொருள் நிறுவனங்களான இன்போசிசு, டாடாவின் டி.சி. எசு, விப்ரோ, மைக்ரோசாப்ட், அசென்சர், போலாரிசு போன்ற நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. மேலும் சில பன்னாட்டு வங்கிகளின் கிளைகளுமுள்ளன. நட்சத்திர ஓட்டல்கள், பாலயோகி விளையாட்டு அரங்கம், பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் என பல உள்ளன. அருகிலேயே ஐதராபாத் பல்கலைக்கழகம், டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம், கேந்திரிய வித்தியாலயம், மௌலான ஆசாத் உருது பல்கலைக் கழகம் என்று பலவும் உள்ளன. நகரின் பிறப்பகுதிகளை இணைக்கும் நல்ல சாலை வசதிகளுண்டு. பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் செல்லும் சாலையும் அருகிலேயே உள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads