காஞ்சனா (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சனா (Kanchana, பிறப்பு: 16 ஆகத்து 1939) 1960 மற்றும் 70களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர்.[1] இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் போன்ற தமிழ்த் திரைப்பட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1964 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஸ்ரீதரின் நகைச்சுவை பொழுதுபோக்கு சித்தரமான காதலிக்க நேரமில்லை திரைப்படம் இவர் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
- நடிகை காஞ்னாவின் இயற்பெயர் வசுந்தராதேவி என்பதை திரையுலகிற்காக இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் பெயர் மாற்றம் செய்தார்.
- இவர் சத்யநாராயணா சாஸ்திரி–வித்யலதா இணையாருக்கு முதல் மகளாக பிறந்தார். இவருக்கு ரவி என்ற சகோதரர் சிறுவயதிலேயே இறந்து விட கிரிஜா பாண்டே என்ற தங்கை மட்டும் உள்ளார்.
திரையுலக அனுபவம்
- சிவாஜியுடன் சிவந்த மண் படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என்ற சாட்டையடி பாடலில் இவர் ஆடியது இரசிகர்களை ஈர்த்தது.
- மேலும் எம்ஜிஆருடன் பறக்கும் பாவை (1966), நான் ஏன் பிறந்தேன் (1972) ஆகிய திரைப்படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966), தங்கை (1967), சிவந்த மண் (1969), விளையாட்டு பிள்ளை (1970), அவன் ஒரு சரித்திரம் (1977), லாரி டிரைவர் ராஜகண்ணு (1981) போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
- மேலும் அதே கண்கள், காதலிக்க நேரமில்லை, சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா, பாமா விஜயம் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- இவர் 1967 ஆம் ஆண்டு நடித்த தெலுங்குத் திரைப்படமான ஸ்ரீ கிருஷ்ணவதாரம் படத்தில் ராணி சத்யபாமாவாக நடித்த அதே படாடோப கவர்ச்சி ராணியின் வேடத்திலேயே தமிழில் வெளியான சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடலில் அதே படாடோப ராணி சத்யபாமா வேடத்தில் சவுதி அரபு பேரழிகியாக நடித்தார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads