காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் (எமதரும லிங்கேசம்) என அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
Remove ads
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: எமதரும லிங்கேசுவரர்.
- வழிபட்டோர்: எமன்.
தல வரலாறு
இங்கே எமதர்மர் சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்து வழிபட்டார். மகிழ்ந்த இறைவன் எமதருமனுக்கு காட்சி தந்து, தென்றிசைக்கு கடவுளாகும் காவலையும் தந்து, அத்துடன் "தம்மை வணங்கும் அடியார்களையும் தண்டிக்கலாகாது" என பணித்தார் என்பது இத்தல வரலாறு.[2]
தல பதிகம்
- பாடல்: (இயமன் வழிபாடு)
- அங்கவை வழங்கிக் கடவுளர்க் காசான் ஆம்பெருந் தகைமையும்
- நல்கிச், சங்கவெண் குழையான் இலிங்கத்தின் மறைந்தான் தருமன்அங்
- கெய்திஏத் தெடுப்பப், புங்கவன் தோன்றித் தென்திசைக் கிறையாம்
- புரவளித் தெமைவணங் குநர்க்கு, மங்கருந் தண்டம் இயற்றில் அன்
- றுனக்கு மாளும் இப் பதமென விடுத்தான்.
- பொழிப்புரை:
- அவ்வரங்களை அருள் செய்து தேவர்களுக் காசாரியனாம்
- பெருந்தகுதியையும் தந்து வெள்ளிய சங்கக் காதணியினனாகிய பெருமான்
- சிவலிங்கத்தில் மறைந்தருளினன். இயமன் அத்தலத்தினை அடைந்து
- துதிப்பப் பெருமான் எழுந்தருளித் தென்திசைக் கிறைவனாம் காவலைத்
- தந்தருளி ‘எம்மை வணங்கும் அடியவர்க்கு மங்குதற்குரிய கடுந்தண்டனை
- இயற்றின் அன்றே இப்பதவி உனக்ககலும்’ எனக்கூறி விடுத்தனன்.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் வேகவதி ஆற்றின் கரையில் பிள்ளையார்பாளையம் தாயார் குளத்தின் மேற்குக் கரையில் எமதரும லிங்கேசம் காயாரோகணத்தின் அருகில் உள்ளது மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.[4]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads