காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் (சந்திரேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், சந்திரனுக்கு சோமன் என்ற மற்றொரு பெயருடனும் விளங்குவதால்; காஞ்சிப் புராணத்தில் இக்கோயில் சோமேச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் காஞ்சிபுரம் சந்திரேசம்., பெயர் ...
Remove ads

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

  • சந்திர தீர்த்தக் கரையிலிருந்த சந்திரன் வழிபட்ட இச்சிவலிங்க மூர்த்தம் தற்போது அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் அருகில் சந்திரன் திருமேனியுள்ளது.
  • இவ்விறைவரை சந்திரன் வழிபட்ட மூர்த்தியாகும். ஆதலின் இக்கோயில் சந்திரேசம் என்று வழங்குகிறது.
  • சந்திரதீர்த்தம் என்பது தற்போது வெள்ளைக்குளம் என்றழைக்கப்படுகிறது.

[2]

தல பதிகம்

  • பாடல்: (சந்திர தீர்த்தம்)
வீங்கிருள்சீத் தொளிபரப்பிப் பைங்கூழ் புரக்கும் வெண்கதிரோன்
தேங்கமல முகைஅவிழ்க்குஞ் சருவ தீர்த்தத் தென்திசையின்
ஆங்கண் நறுஞ்சுவைத்தெள்ளாரமுதத்தடந்தொட்ட தன்கோட்டி
பாங்குபெறப்பிஞ்ஞகன் தாள் அருச்சித் தேத்திப்பயன்பெற்றான்.
  • பொழிப்புரை:
பேரிருளை நீக்கி ஒளியைப் பரப்பிப் பயிரை வளர்க்கும் சந்திரன்
தேன் மருவிய தாமரை அரும்பை மலர்த்துஞ் சருவ தீர்த்தத்திற்குத் தெற்கில்
நறிய சுவையையுடைய தெள்ளிய அரிய அமுத மயமான நீர் நிலையை
அகழ்ந்ததன் கரையில் நற்பண்பமையச் சிவபிரான் திருவடிகளை அருச்சனை
செய்து பயனைப் பெற்றனன்.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிற்கு அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads