காஞ்சிபுரம் மாநகராட்சி
இந்தியாவின் தமிழகத்தின் 21 மாநகராட்சிகளில், பதினேழாவது பெரிய மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் மாநகராட்சி (Kancheepuram Municipal Corporation) தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில் ஒன்றாகும்.[1][2][3] இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான காஞ்சிபுரம் நகரத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்கொள்கிறது. இம்மாநகராட்சி 21 அகடோபர் 2021 அன்று நிறுவப்பட்டது.[4][5] இது 36.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாநகராட்சி 51 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.
Remove ads
2022 காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான முதல் தேர்தல் 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.[6]இதன் 36-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 50 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 32 வார்களிலும், அதிமுக 9 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 1 வார்டிலும், பாமக 2 வார்டுகளிலும் மற்றும் சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.[7]மாமன்ற உறுப்பினர்கள் இதன் மேயர் மற்றும் துணை மேயரை வாக்களித்து தேர்வு செய்கின்றனர். இம்மாநகராட்சியின் முதல் மேயராக எம். மகாலெட்சுமி (திமுக) என்பவரும், துணை மேயராக குமரகுருநாதன் (காங்கிரஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாமன்ற தலைமை செயல் நிர்வாகியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆணையாளராக உள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads