காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் (முக்கால ஞானேசம்) என அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இம்மூலவரை திரிகால ஞானேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
Remove ads
இறைவர், வழிபட்டோர்
- இறைவர்: முக்கால ஞானேஸ்வரர்.
- வழிபட்டோர்: முனிவர்கள் சிலர்.
தல வரலாறு
முனிவர்கள் சிலர், முக்காலத்தையும் உணர்ந்தறியும் ஞானத்தைப் பெறும்பொருட்டு, சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபாடாற்றிய தலம். என்பது இத்தல வரலாறு.[2]
தல பதிகம்
- பாடல்: (திரிகால ஞானேசம்)
- அனைய சூழலின் குணாதுமுக் காலமும் அறிவான்
- முனிவர் சிற்சிலர் எய்திமுன் இலிங்கம்ஒன் றிருத்தி
- இனிய பூசனை இயற்றிட அவர்க்கது ஈந்தார்
- கனியும் அன்பருக் கருளும்முக் காலஞா னேசம்.
- பொழிப்புரை:
- அத்தகைய வரைப்பினுக்குக் கிழக்கின் கண்ணது முக்காலங்களையும்
- அறியும் அறிவு பெறற் பொருட்டு முனிவரர் சிலர் அடைந்து சிவலிங்கம்
- நிறுவி இனிய சிவபூசனையைப்புரிய அவர் தமக்கு முக்கால உணர்வை ஈந்த
- பிரானார் பழுத்த அன்பினர்க்கு அருளுதல் புரியும் திரிகால ஞானேசம்.[3]
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தினுள்ளே இக்கோயில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் மேற்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[4]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads