காஞ்சிப்பட்டு
காஞ்சிபுரம்பட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் பட்டுப் புடவை (Kanchipuram silk sari) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை பட்டு புடவையாகும்.[1] காஞ்சீவரம் புடவை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புடவைகளை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் மணப்பெண் மற்றும் சிறப்பு சந்தர்ப்ப புடவைகளாக அணிகின்றனர். 2005–2006ஆம் ஆண்டில் இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது.[2][3][4]
2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 5,000 குடும்பங்கள் புடவை உற்பத்தியில் ஈடுபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5] காஞ்சிபுரம் பகுதியில் 25 பட்டு மற்றும் பருத்தி நூல் தொழிற்சாலைகளும் 60 சாயமிடும் அலகுகளும் உள்ளன.[6]
Remove ads
பட்டு நெசவு
புடவைகள் தூய மல்பெரி பட்டு நூலிலிருந்து நெய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் புடவைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தூய மல்பெரி பட்டு மற்றும் சரிகை ஆகியவை தென்னிந்தியாவிலிருந்து வருகின்றன.[7] கச்சா பட்டு நூல்கள் துடிப்பான, இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி சாயமிடப்படுகின்றன. சாயமிடுதல் செயல்முறையானது செழுமையான, நீண்ட கால சாயல்களை அடைய நூல்களை பலமுறை ஊறவைத்தல், கொதிக்கவைத்தல் மற்றும் கழுவுதல் ஆகிய செயல்முறைகள் அடங்கியதாகும். காஞ்சிபுரம் புடவையை நெசவு செய்ய மூன்று ஓடக்கட்டைகள் எனப்படும் நெசவுத்தறிகள் பயன்படுத்தப்படுகின்றன. நெசவாளர் வலது பக்கம் வேலை செய்யும் அதே வேளையில், அவரது உதவியாளர் இடது பக்க நெசவுத்தறியில் வேலை செய்கிறார். புடவையின் கரை நிறமும் வடிவமைப்பும் பொதுவாக புடவையின் உடல் பகுதியிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். முந்தி (புடவையின் தொங்கும் முனை) வேறு நிழலில் நெய்யப்பட வேண்டுமானால், அது முதலில் தனித்தனியாக நெய்யப்பட்டு, பின்னர் மென்மையாக புடவையுடன் இணைக்கப்படுகிறது.[7] உடல் முந்தியைச் சந்திக்கும் பகுதி பெரும்பாலும் ஒரு நெளிவரி கோட்டால் குறிக்கப்படுகிறது.[8] உண்மையான காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், உடலும் கரையும் தனித்தனியாக நெய்யப்பட்டு, பின்னர் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. புடவைகள் கிழிந்தாலும், கரை பிரிக்க முடியாத அளவுக்கு மிகவும் வலுவாக நெய்யப்படுகிறது. இதுவே காஞ்சிவரம் பட்டுப் புடவைகளை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது.[9][10]
Remove ads
வடிவமைப்பு
புடவைகள் அவற்றின் பரந்த மாறுபட்ட கரைகளால் வேறுபடுகின்றன. கோயில் கரைகள், கட்டங்கள், கோடுகள் மற்றும் மலர் (புட்டாக்கள்) ஆகியவை காஞ்சிபுரம் புடவைகளில் காணப்படும் பாரம்பரிய வடிவமைப்புகளாகும்.[8] காஞ்சிபுரம் புடவைகளில் உள்ள வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகள் தென்னிந்திய கோயில்களில் உள்ள படங்கள் மற்றும் வேத எழுத்துக்கள் அல்லது இலைகள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை அம்சங்களை காட்டுகின்றன.[11] செல்வந்தர் வீட்டுப் பெண்கள் ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களையும், மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் இதிகாசங்களையும் காட்டும் நேர்த்தியான நெய்த முந்தியுடன் கூடிய புடவைகளை வாங்கி உடுத்துகிறார்கள். வேலைப்பாடு, வண்ணங்கள், வடிவம், சரிகை (தங்க நூல்) போன்ற பயன்படுத்தப்படும் பொருள்கள், நெசவு நுணுக்கம் ஆகியவற்றைப் பொறுத்து காஞ்சிபுரம் புடவைகளின் விலை பரவலாக வேறுபடுகிறது. இந்தப் பட்டு அதன் தரம் மற்றும் கைவினைத்திறனுக்காகவும் அறியப்படுகிறது.[12]
Remove ads
தனிச்சிறப்பு
கனமான பட்டு மற்றும் தங்கத் துணியால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் புடவைகள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இவை சிறப்பு சந்தர்ப்பங்களிலும் விழாக்களிலும் அணியப்படுகின்றன.[13]
புவிசார் குறியீடு
2005ஆம் ஆண்டில், காஞ்சிபுரம் புடவைகளுக்கு புவிசார் குறியீட்டைப் பெற தமிழக அரசு விண்ணப்பித்தது.[14] 2005-06 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது.[2]
மக்கள்சார் பண்பாடு
2008ஆம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் என்ற தமிழ் திரைப்படம் காஞ்சிபுரத்தில் பட்டு நெசவாளர்களின் போராட்டங்களை சித்தரிக்கிறது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads