காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் (Kanchipuram Ulagalantha Perumal Temple) காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காக அமைந்துள்ள ஒரு கோயிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுருவம் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற இத்தலம் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோயிலிலுள்ளேயே 108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திருவூரகம், திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.[1][2][3]

விரைவான உண்மைகள் பிறபெயர்கள்:, மூலவர்: ...
விரைவான உண்மைகள் பிறபெயர்கள்:, மூலவர்: ...
Remove ads

தல புராணம்

Thumb

ஒரு அந்தணச் சிறுவனாக அவதரித்த விஷ்ணு, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான். நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும், மண்ணையும் இரு அடிகளால் அளந்துவிடுகிறார். மூன்றாம் அடி வைக்க இடமில்லாததால், அதனை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாமல் மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கத் விஷ்ணு வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம், பாடகம் என வழங்கப்படுகிறது. இந்த நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

Remove ads

கோயிலின் அமைப்பு

கோயிலின் பரப்பளவு 60,000 சதுர அடிகள் (5,600 m2) ஆக உள்ளது. இதன் முதன்மையான ராஜ கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. பல்லவத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் நகர வடிவமைப்பு இக்கோயிலை மையமாகக் கொண்டு தாமரை வடிவில் அமைந்துள்ளது.

திருவுருவின் அமைப்பு

விஷ்ணுவின் திருவுருவத்திற்கு திரிவிக்ரமன் என்பதாக பெயர் வழங்கப்படுகிறது. 30 அடி உயரமுள்ள நீண்ட விஷ்ணுவின் திருவுருவம் சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லாமல், வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்குரிய சிறப்பாகும். இந்த திருவுருவத்தின் இடது கால் உடலுக்கு செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால் மகாபலி சக்கரவர்த்தியின் தலை மீது அழுத்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் விரிந்திருப்பதும் சிறப்பாகும்.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads