காதலிக்க வாங்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காதலிக்க வாங்க (Kadhalikka Vanga) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்), மேஜர் சுந்தரராஜன் , மனோரமா, கவிதா, விஜயாகிரிஜா மற்றும் தேங்காய் சீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கங்கா, காவேரி மற்றும் யமுனா, என்ற மூன்று சகோதரிகள், தங்கள் தந்தையிடமிருந்து ஒரு வைரத்தை திருட திட்டமிடுகின்றனர். ஆனால் வைரத்தைத் திருடுகையில் ரமேஷ், என்ற ஒரு திருடனால் திட்டங்கள் யாவும் தோல்வியடைந்தன.[1][2]
Remove ads
கதை
கங்கா (மனோரமா), யமுனா (விஜயா கிரிஜா) மற்றும் காவேரி (கவிதா) ஆகிய மூன்று சகோதரிகளும் ஒரு விடுதியில் சந்திக்கிறார்கள். காவேரி தனது சகோதரியிடம் தனது வீட்டிலேயே திருடப்போவதாக ஒரு பந்தயம் கட்டுகிறாள். இதை கொள்ளைக்காரன் ரமேஷ் (ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) ) மறைந்திருந்து கேட்கிறான். தமிழரசு ஜெய்சங்கர் அந்த விடுதியில் பணி புரிந்து வருகிறான். காவேரி தனது தந்தை தேங்காய் சீனிவாசனை மிரட்டி வீட்டிலுள்ள வைரத்தை எடுத்து வெளியில் நிற்கும் தனது மற்ற இரு சகோதரிகளிடம் காண்பிக்கிறாள் அதே சமயம் அங்கே மறைந்திருந்த ரமேஷ் அந்த வைரத்தை அவளிடமிருந்து தட்டிப் பறிக்கிறான். யமுனா ரமேஷின் (ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)) வண்டி எண்ணை கவனித்து அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் நடந்த திருட்டைப்பற்றி புகார் அளிக்கின்றனர்.
ரமேஷ் (ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) அவரது வாகனத்தை ஓட்டிச்செல்லும்போது, காவலர்கள் தடுக்க அவர் அவர்களிடமிருந்து தப்பித்து, ஓடி, ஒரு சுவரின் பின்னால் தனது கையிலிருக்கும் பெட்டியை வீசுகிறார். அவ்வழியே தனது வீட்டிற்குத் திரும்பி வரும் தமிழரசு (ஜெய்சங்கர்) அப்பெட்டியை திறக்க ,வைரம் உள்ளே இருப்பதைப் பார்க்கிறார், அங்கே திடீரென்று வந்த, ஜூடோ (மேஜர் சுந்தரராஜன்) பெட்டியை தமிழரசினிடமிருந்து பறித்துச் செல்கிறார். பின்னர் நடக்கும் பல சுவாரஸ்யமான கதை நகர்த்தளில் பல திருப்பங்கள் ஏற்படுகிறது. கடைசியாக தேங்காய் சீனிவாசன் தனது மூன்று மகள்களயும் மும்பை துப்பறியும் அதிகாரிகளான ஜூடோ (மேஜர் சுந்தரராஜன்) , ரமேஷ்(ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)) மற்றும் டில்லி துப்பறியும் அதிகாரியான தமிழரசு ஆகிய மூவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- ஜெய்சங்கர் - தமிழரசு
- மேஜர் சுந்தரராஜன் -ஜூடோ
- ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) - ரமேஷ்
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா - கங்கா
- விஜயா கிரிஜா - யமுனா
- ஷப்னம் - ஜாஸ்மின்
படக்குழு
- இயக்குநர்: ஐ. என். மூர்த்தி
- தயாரிப்பாளர்: தமிழ்வாணன்
- தயாரிப்பு நிறுவனம்: காமெடி பிக்சர்ஸ்
- இசை: ஜே. வி. ராகவா நாயுடு
- கதை: தமிழ்வாணன்
- வசனம்: தமிழ்வாணன்
- படத்தொகுப்பு: கே. பாலு
- ஒளிப்பதிவு: சிட்டிபாபு
- கலை: ஞானாயுதம்
- பாடல்கள்: கவிஞர் வீரபாண்டியன்
- திரைக்கதை: தமிழ்வாணன்
- நடனம்: மலேசியா மகாலிங்கம்
- படபிடிப்பு அரங்கம்: விஜயா`ஸ் ஸ்டுடியோ, வீனஸ் கம்பைன்ஸ், ஏவிஎம் , சாராதா ஸ்டுடியோ, வீனஸ்
ஒலித்தொகுப்பு
இப்படத்தின் இசை ஜே. வி. ராகவா நாயுடு பாடல்கள் எழுதியது கவிஞர் வீரபாண்டியன்.[3]
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads