காத்திருப்பேன் உனக்காக

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காத்திருப்பேன் உனக்காக (Kaathirupaen Unakaaha) 1977-இல் இலங்கையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். வி. சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சிவராம், கீதாஞ்சலி, தர்மலிங்கம், சிறீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் காத்திருப்பேன் உனக்காக, இயக்கம் ...

மலையகத்தில், வத்தேகம எனும் இடத்தைச்சேர்ந்த மூன்று சகோதரர்கள் -எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜா என்பவர்கள் இத்திரைப்படத்தைத் தயாரித்தார்கள். எம். செல்வராஜாவின் கதைக்கு, திரைக்கதை, வசனம், பாடல்களை அவர்களது ஆசானான நவாலியூர் நா. செல்லத்துரை எழுதினார்.[1]

கண்டியில் வெளிவந்த "செய்தி" பத்திரிகையின் ஆசிரியரான நாகலிங்கத்தின் மகனான எம். என். சிவராம் (தற்போது தமிழ்நாட்டில் சென்னையில் வசிக்கிறார்) இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். அவரோடு கீதாஞ்சலி, ஸ்ரீதேவி, விஸ்வநாதராஜா, நவாலியூர் நா. செல்லத்துரை, செல்வராஜ், சிங்கள நடிகை ருக்மணி தேவி போன்ற பலர் நடித்தார்கள்.[1] பல சிங்களத் திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக இருந்த அனுபவத்துடன் எஸ். வி. சந்திரன் இத்திரைப்படத்தின் இயக்குனராகவும், படத்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். எஸ். தேவேந்திரா படப்பிடிப்பாளராகவும், ஆர். முத்துசாமி இசை அமைப்பாளராகவும் இணைந்து கொண்டார்கள். ஜோசப் ராஜேந்திரன், சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள்.[1]

Remove ads

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இது ஒரு முக்கோணக் காதல் கதை. ராஜி ராஜாவைக் காதலிக்கிறார், ராஜா சாந்தாவைக் காதலிக்கிறார். ராஜியின் அண்ணன் கண்ணனும், ராஜாவின் சகோதரி வனிதாவும் ஒருவரையொருவர் காதலிப்பதால் கதை மேலும் மாறுகிறது. ராஜா சாந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை அறிந்த ராஜியின் சகோதரர் கண்ணன், ராஜாவை ராஜியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் நோக்கோடு வனிதாவை பலாத்காரம் செய்கிறார். மீதிக்கதை ராஜா எடுக்கும் தேர்வை அவிழ்க்கிறது.

Remove ads

வரவேற்பு

  • 1977 சூன் 24 அன்று வெளியான இத்திரைப்படம் யாழ்ப்பாணம் வின்சர் திரையரங்கில் 42 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இறுதிக்காட்சியில் சிவராமின் நடிப்பு உச்சமாகக் கருதப்பட்டது.
  • இத்திரைப்படத்தில் தாய் வேடத்தில் நடித்த பிரபல சிங்கள நடிகை ருக்மணி தேவிக்கு, பிரபல வானொலி அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் பின்னணிக்குரல் கொடுத்தது மிகச் சிறப்பாக இருந்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads