காத்திருப்போர் பட்டியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காத்திருப்போர் பட்டியல் (Kaathiruppor Pattiyal) 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் பாலையா டி. ராஜசேகர். இதை தயாரித்தவர்கள் பைஜா டாம் மற்றும் கே. வி. ஜெயராம்.[1][2] இத் திரைப்படத்தில் அறிமுக நடிகர் சச்சின் மணி கதாநாயகனாகவும், நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், அருள்தாஸ், மனோபாலா, சென்றாயன், அருண்ராஜா காமராஜ் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] ஷான் ரோல்டன் இப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இத் திரைப்படம் 2018, மே மாதம் 4ம் நாள் வெளியிடப்பட்டு மக்களிடம் சுமாரான வரவேற்பைப் பெற்றது.[4][5]

விரைவான உண்மைகள் காத்திருப்போர் பட்டியல், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

இரயில்வே காவல் துறையின் அதிகாரியான வில்லியம்ஸ், பொதுமக்கள் இரயில்வே காவலர்களை மதிப்பதில்லை என்கிற காரணத்தினால் கடுமையான சட்ட திட்டங்களை கொண்டுவருகிறார். தண்டவாளங்களின் மீது நடந்து செல்வோரிடமும், பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி தன் கீழ் பணிபுரிபவரிடம் எச்சரிக்கை விடுக்கிறார். இதற்கிடையில் சத்யா (சச்சின் மணி) என்கிற வேலை இல்லாத இளைஞன் பணக்காரப் பெண்ணாகிய மேகலாவிடம் (நந்திதா), காதல் கொள்கிறான். மேகலாவும் அவனை விரும்புகிறாள். இதை அவளின் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் மேகலாவிற்கு உடனடியாக திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்கிறார்.[6] இதை சத்யா தெரிந்துகொண்டு மேகலாவை மணந்துகொள்ள எண்ணி புகைவண்டியில் பயணிக்க ஒரு பொய்யான பயணச்சீட்டை உருவாக்குகிறான். ஆனால் அவனது எண்ணம் ஈடேறவில்லை. இரயில்வே காவலர்கள் அவன் செய்த குற்றத்திற்காக கைது செய்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.[7] அங்கு கைதிகளான பாஸ்கர் (சென்றாயன்), குஞ்சித பாதம், (மனோபாலா), குட்டி புலி (அருண்ராஜா காமராஜ்), சதீஷ் (அப்புக்குட்டி), மற்றும் கோடீஸ்வரனை (மயில்சாமி) சந்தித்து தன் காதல் கதையைக் கூறுகிறான். அவன் கதையைக் கேட்டதும், கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்யாவை தப்பிக்க வைப்பதற்கான திட்டம் தீட்டினர்.[8]

Remove ads

நடிப்பு

தயாரிப்பு

2017இல் இயக்குநர் பாலையா டி. ராஜசேகரால் இப் பட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, மே 4, 2018இல் வெளியிடப்பட்டது.[9] படத்தின் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டன.[10] இப் படத்திற்கு ரூபன் படத்தொகுப்பையும், எம். சுகுமார் ஒளிப்பதிவையும், லால்குடி என். இளையராஜா கலை வடிவமைப்பையும் செய்துள்ளனர்.

பாடல்கள்

இப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.[11]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads