காந்தமானி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காந்தமானி (magnetometer )என்பது காந்தப்புலம் அல்லது காந்த இருமுனைத் திருமையை அளவிடும் கருவியாகும். பல்வேறு வகையான காந்தமானிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு காந்தப்புலத்தின் திசை வலிமை அல்லது ஒப்பீட்டு மாற்றத்தை அளவிடுகின்றன. திசைகாட்டி என்பது ஒரு சுற்றுப்புறக் காந்தப்புலத்தின் திசையை அளவிடும் கருவியாகும் , இந்த நேர்வில் அளக்கப்படுவது புவியின் காந்தப்புலம் ஆகும். மற்ற காந்தமானிகள் இரும்பியல் காந்தம் போன்ற காந்தப் பொருளின் காந்த இருமுனைத் திருப்புமையை அளவிடுகின்றன. எடுத்துக்காட்டாக , சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டத்தில் இந்த காந்த இருமுனையின் விளைவைப் பதிவு செய்வதால் காந்த இருமுனைத் திருப்புமை அளக்கப்படுகிறது..

விண்வெளியில் ஒரு கட்டத்தில் தனிநிலைக் காந்தச் செறிவை அளவிடக்கூடிய முதல் காந்தமானி 1833 ஆம் ஆண்டில் கார்ல் பிரெடெரிக் காசு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது , மேலும் 19 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் கால் விளைவு அடங்கும் , இது இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
புவி இயற்பியல் ஆய்வுகளில் புவியின் காந்தப்புலத்தை அளவிடுவதற்கும் , பல்வேறு வகையான காந்த முரண்பாடுகளைக் கண்டறிவதற்கும் , காந்தப் பொருட்களின் இருமுனைத் திருப்புமையைத் தீர்மானிப்பதற்கும் காந்தமானிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமானத்தின் திசைவைப்பு, முன்னேறு மேற்கோள் அமைப்பில் அவை பொதுவாக முன்னேற்றக் குறிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய காந்தச் சுரங்கங்களில் தூண்டுதல் பொறிமுறையாகவும் காந்தமானிகள் படைத்துறையால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக , அமெரிக்கா , கனடா, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் மிகவும் உணர்திறன் கொண்ட காந்தமானிகளை படைத்துறைத் தொழில்நுட்பமாக வகைப்படுத்தி அவற்றின் பரவலான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.
காந்தமானிகள் உலோகக் கண்டுபிடிப்பிகளாகப் பயன்படுத்தப்படலாம். அவை காந்த உலோகங்களை மட்டுமே கண்டறிய முடியும் , ஆனால் கடத்துத்திறனை நம்பியிருக்கும் வழக்கமான உலோகக் கண்டறிதல்களை விட அதிக தொலைவில் உள்ள அத்தகைய உலோகங்களைக் கண்டறிய முடியும். காந்தமானிகள் சீருந்துகள் போன்ற பெரிய பொருட்களை 10 மீட்டர்கள் (33 அடி) மீட்டருக்கும் (33 அடி) மேல் கண்டறியும் திறன் கொண்டவை. அதே நேரத்தில் ஒரு வழக்கமான உலோகக் கண்டுபிடிப்பியின் வரம்பு அரிதாகவே 2 மீட்டர்கள் (6 அடி 7 அங்) அதிகமாக இருக்கும்.
அணமைய ஆண்டுகளில் காந்தமானிகள் மிகக் குறைந்த செலவில் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் இணைக்கப்படக்கூடிய அளவிற்கு சிற்றளவாக்கப்பட்டுள்ளன , மேலும், இவை சிற்றளவாக்கத் திசைகாட்டிகளாக (மெம்சு காந்தப்புல உணரி) அதிக பயன்பாட்டைக் காண்கின்றன.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads